சடையாச்சி அம்மையார்
சடையாச்சி அம்மையார் | |
---|---|
தமிழ் எழுத்து முறை | சடையாச்சி அம்மை |
சடையாச்சி அம்மை என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து சமாதியடைந்த சித்தராவார்.[1]
வரலாறு
இவரது இயற்பெயர் சண்முகத்தம்மாள். ராஜபாளையம் ஊரைச் சேர்ந்த இவர், திருவண்ணாமலைக்கு 40 வயதில் வந்தார். இல்லறவாழ்க்கையை துறந்து திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம், பலாமரத்தடி குகை போன்றவற்றில் வாழ்ந்தார்.
சிவத்தொண்டு
அண்ணாமலையாருக்கு தும்பைப் பூவால் மாலை செய்து தினமும் சாற்றிவந்தார். தும்பைப்பூ சிவனுக்குப் பிரியமானது என்று எடுத்துரைப்பார்.
மகிமை
அம்மை ஐந்து நாட்களாய் கோயிலுக்கு வராமல் இருந்தார். அர்ச்சகர் கனவில் வந்த சிவபெருமான் குளத்தில் நீருக்குள் அவர் இருப்பதை தெரிவித்தார். பின்பு அர்ச்சகர் குளத்து படிகட்டின் அடியில் மாட்டியிருந்த அம்மையை விடுவித்துள்ளார். ஐந்துநாட்கள் நீரில் படுத்த நிலையில் தியானம் செய்துள்ளார் அம்மை.
இவரது சடை பதினாறு அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்டிருந்தது. இதனால் சடையாச்சி அம்மையார் என்று பெயர் பெற்றார்.