சஞ்சனா சிங் (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சஞ்சனா சிங்
பிறப்பு23 பெப்ரவரி 1986 (1986-02-23) (அகவை 38)
மகாராட்டிரம், மும்பை
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது வரை

சஞ்சனா சிங் (Sanjana Singh, பிறப்பு : 23 பிப்ரவரி 1986) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். 2009 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ரேனிகுண்டா திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.[1]

தொழில்

2009 ஆம் ஆண்டில் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ரேனிகுண்டா திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அப்படத்தில் இவர் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.[2] அடுத்ததாக கோ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் தெலுங்கு பெண்ணாக நடித்தார், இதில் "அக நக" பாடலில் பல நடிகர்களுடன் நடித்தார்.

2010ஆம் ஆண்டில், "மறுபடியும் ஓரு காதல்", "வெயிலோடு விளையாடு" , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் குத்தாட்டப் பாடல்களுக்கு ஆட ஒப்பந்தமானார். குற்றவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான "யாருக்கு தெரியும்" படத்தில் இவர் நடிகர் ஹரிஷ் ராஜ் உடன் நடித்தார். தயாரிப்பாளர்கள் இரண்டாவது முறையாக இந்த படத்தில் பாத்திரத்தில் நடிக்க இவரை அணுகிய பின்னரே இவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இயக்குநர் அதியமான் இயக்கிய "தப்புத் தாளங்கள், காதல் பாதை" படத்தில் தலைவாசல் விஜயின் இரண்டாவது மனைவியாக நடித்தார். சி. எஸ். அமுதன் இயக்கிய தமிழ் படம் படத்திலும், கருணாசின் "ரகளபுரம்" படத்திலும், மீண்டும் சி. எஸ் அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும், சன் தொலைக்காட்சியின் கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியிலும் இடம்பெற்றார்.

திரைப்படவியல்

  • குறிப்பில் ஏதும் இல்லா எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2009 ரேனிகுண்டா ஊமையான பெண்ணின் பெயர் சொல்லப்படாத அக்காள்
2011 கோ குடிபோதையில் உள்ள தெலுங்குப் பெண் சிறப்பு தோற்றம்
2012 காதல் பாதை
மயங்கினேன் தயங்கினேன் சிறப்பு தோற்றம்
மறுபடியும் ஒரு காதல் சிறப்பு தோற்றம்
யாருக்குத் தெரியும் பாஷா / கனிகா கன்னடத்தில் சேலஞ்ச் என்றும், மலையாளத்தில் 120 மினிட்ஸ் என்று உருவானது[3]
2013 ரகளபுரம் ஸ்வேதா
2014 வெற்றிச் செல்வன்
அஞ்சான் சிந்து
விஞ்ஞானி
மீகாமன் ரானேவின் மனைவி
2015 இரவும் பகலும் வரும் ஹம்சா
தோடா லுட்ஃப் தோடா இஷ்க் இந்தி படம், சிறப்பு தோற்றம்
தனி ஒருவன் அம்முலு
2016 வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் சிறப்பு தோற்றம்
2017 சக்க போடு போடு ராஜா ஹம்சா
2020 மானே தேனே பேயே

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சஞ்சனா_சிங்_(நடிகை)&oldid=22645" இருந்து மீள்விக்கப்பட்டது