சஞ்சனா சாரதி (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சஞ்சனா சாரதி
பிறப்பு25 சூலை 1993 (1993-07-25) (அகவை 31)
பணிநடிகை, வடிவழகி, தொழில்முனைவோர்
அறியப்படுவதுசாட்டர்பாக்ஸ், துப்பாக்கி, வாழு

சஞ்சனா சாரதி ( Sanjana Sarathy ) ஒரு இந்திய நடிகையும், வடிவழகியும் ஆவார். முக்கியமாக தமிழ் திரையுலகில் பணிபுரிகிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான துப்பாக்கியில் நடிகர் விஜயின் சகோதரியாக சிறிய பாத்திரத்திற்காக இவர் மிகவும் பிரபலமானவர். சின்தால், அமேசான் ஃபயர்ஸ்டிக், 7அப், பிஸ்ஸா ஹட், ஏவிடி டீ, 7யுபி மெட்ராஸ் கிக் மற்றும் ஏஸ்2த்ரீ போன்ற பல பொருட்களுக்கும் இவர் தோன்றியுள்ளார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சஞ்சனா விஜய் சாரதி மற்றும் ராஜி ஆகியோர்க்கு 25 ஜூலை 1993 இல் பிறந்தார். சென்னை செயின்ட் மைக்கேல் அகாதமியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சென்னை, எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரியில் ஊடக மின்னணுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடக மின்னணு படிப்பை முடித்துவிட்டு, ஆங்காங்கில் செய்தி ஊடக நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

தொழில்

சஞ்சனா பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாலும், விஜய் நடித்த துப்பாகியில் அவரது தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் இசைக் காணொளி, 7அப் மெட்ராஸ் கிக் சீசன் 2 - ஆவிழையில் தோன்றுகிறார். 2019 ஜீ5 வலைத் தொடரான ஃபிங்கர்டிப்பில் தனது நடிப்பிற்காக பாராட்டப்பட்டார்.[2][3]

சஞ்சனா தற்போது "நினைவோ ஒரு பறவை" படத்தில் கதாநாயகியாக பணிபுரிகிறார். இதில் ஜம்ப் கட்ஸ் - ஹரி பாஸ்கர் [4][5] முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சஞ்சனா சாட்டர்பாக்ஸ் என்ற தனது சொந்த ஒப்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[6] யுவன் சங்கர் ராஜாவின் 2019 அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது இவர் அவருடன் பயணம் செய்தார்.[7]

சான்றுகள்

  1. Jagannathan, Sahithya (2018-05-12). "No Filter: This mother-daughter duo makes everyone feel really jealous" (in en) இம் மூலத்தில் இருந்து 2 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201202122117/https://www.dtnext.in/News/City/2018/05/12003635/1072169/No-Filter-This-motherdaughter-duo-makes-everyone-feel-.vpf. 
  2. Balu, Aparajitha (2019-09-10). "Fingertip Review: Welcome Change In The Tamil Television Landscape" (in en-US). https://silverscreen.in/reviews/fingertip-the-zee5-original-series-brings-welcome-change-to-the-tamil-television-landscape/. 
  3. "Serial Chiller: Zee5's Fingertip is a highly relatable, acutely watchable series about modern Tamil lives- Entertainment News, Firstpost" (in en). 2019-09-03. https://www.firstpost.com/entertainment/serial-chiller-zee5s-fingertip-is-a-highly-relatable-acutely-watchable-series-about-modern-tamil-lives-7268831.html. 
  4. "YouTuber Hari Bhaskar makes his film debut". https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/dec/31/youtuber-hari-bhaskar-makes-his-film-debut-2082944.html. 
  5. "YouTuber Jump Cuts Hari Bhaskar makes his film debut". https://www.cinemaexpress.com/stories/news/2019/dec/30/youtuber-jump-cuts-hari-bhaskar-makes-his-film-debut-16276.html. 
  6. "Get your summer swagger on with this 24-year-old Chennai stylist's new collection". https://www.indulgexpress.com/fashion/designers/2018/apr/27/get-your-summer-swagger-on-with-this-24-year-old-chennai-stylists-new-collection-6968.html. 
  7. "Vijay Sethupathi to be part of Yuvan's US music tour - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijay-sethupathi-to-be-part-of-yuvans-us-music-tour/articleshow/69563836.cms. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சஞ்சனா_சாரதி_(நடிகை)&oldid=22644" இருந்து மீள்விக்கப்பட்டது