சசிகலா சின்கா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சசிகலா சின்கா
தேசியம்இந்தியர்
பணிஇந்திய ஏவுகணை அறிவியலாளர்
பணியகம்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு இந்திய அரசு
அறியப்படுவதுதிட்ட இயக்குநர், இந்திய ஏவுகணைத் திட்டம்

சசிகலா சின்கா ஓர் இந்திய அறிவியலாளர், இந்திய அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியான எண்டோ-அட்மாஸ்பெரிக் இடைகுறுக்கீடு ஏவுகணை மேம்பட்ட பகுதி பாதுகாப்பு திட்டத்தில் திட்ட இயக்குநராகவும் இவர் அறியப்பட்டவர். 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் 'விஞ்ஞானி எச்' நிலைக்குத் தரப்படுத்தப்பட்டார். இவரின் கீழ் 300 அறிவியலாளர்கள் செயல்படுகின்றனர்.

வாழ்க்கை

தமிழகத்தின் மதுரையில் பிறந்தவர் சசிகலா சின்கா.[1] இவரது தந்தை ஒரு தரைப்படை பொறியாளர். இதனால் இவர் இந்தியா முழுவதும் வேலையின் காரணமாகப் பயணம் செய்தார். இவர் செகந்திராபாத்தில் உள்ள தூய ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளி, தூய பிரான்சிசு மகளிர் கல்லூரி மற்றும் ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றார்.[2] இவர் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பில் சேர்ந்து, ஒரு வருடத்திற்குள் பதவி விலகி காரக்பூர், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் முதுகலைப் படிப்பை முடித்தார், இங்கு இவர் தனது வாழ்க்கைத் துணைவரையும் சந்தித்தார்.[1] இதற்குப் பிறகு இவர் நுண்ணலைப் பொறியியலாளர் சங்கத்தில் சேர்ந்தார். ஆனால் 1989-இல் தனது முதல் மகள் பிறந்த பிறகு வெளியேறினார். இவரது கணவர் இந்தியக் கடற்படை அதிகாரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். 1997இல், இவரது கணவர் வாகன விபத்தில் இறந்தார்.[2]

சின்கா 1997-இல் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பின் ஏவுகணை ஆராய்ச்சி மையமான இமாரத் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். மேலும் 2001-இல் முழுநேர அறிவியலாளராகப் பதவியில் சேர்ந்தார்.[3] இவர் 'வானொலி அதிர்வு உணர்வி துணை அமைப்பில்' பணிபுரியத் தொடங்கினார். இதற்காக இவரது குழுவிற்கு 2007-இல் அக்னி விருது வழங்கப்பட்டது. 2012-இல் இவர் மேம்பட்ட வான் பாதுகாப்பு திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்தார். 2017-இல் சுமார் 300 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவை வழிநடத்தினார்.[1] வானூர்தி, ரேடாம் மற்றும் கதிரலைக் கும்பா குறுக்குவெட்டுகளை மேம்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர், சின்கா.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சசிகலா_சின்கா&oldid=25486" இருந்து மீள்விக்கப்பட்டது