சங்கர் பாலசுப்பிரமணியன்

சர் சங்கர் பாலசுப்பிரமணியன் (Shankar Balasubramanian, பிறப்பு: செப்டம்பர் 30, 1966, எப்.ஆர்.எஸ்.) இந்தியாவில் பிறந்த பிரித்தானிய வேதியியலர்.[4][5] கேம்பிரிட்சுப் பல்கலைக்கழக வேதியியல் துறையில் எர்சல் சிமித் மருத்துவ வேதியியல் பேராசிரியராகவும்,[6][7][7] கேம்பிரிட்சுக் கழகத்தில் புற்றுநோய் ஆய்வில் முதுநிலை குழுத்தலைவராகவும்,[8] கேம்பிரிட்சு டிரினிட்டி கல்லூரியில் உயராய்வாளராகவும்[9] பணியாற்றுகிறார். கருவமிலங்கள்[10] பற்றிய ஆய்வுகளில் அவர் பங்கு பாராட்டப்பட்டிருக்கிறது. மேலும், இவர் சொலெக்சா (Solexa)[11][12]  மற்றும் கேம்பிரிட்ச் எப்பிஜெனடிக்சு (Cambridge Epigenetix) நிறுவனங்களின் அறிவியல் நிறுவனராகவும்[13][14] உள்ளார்.

சர் சங்கர் பாலசுப்பிரமணியன்
Shankar Balasubramanian, Herchel Smith Professor of Medicinal Chemistry.jpg
பிறப்பு30 செப்டம்பர் 1966 (1966-09-30) (அகவை 57)[1]
சென்னை, இந்தியா
வாழிடம்ஐக்கிய இராச்சியம்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (MSci, PhD)
ஆய்வேடுStudies on the reaction mechanism of chorismate synthase (1992)
ஆய்வு நெறியாளர்கிறிசு ஏபெல்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
யூலியன் உப்பர்ட்[2][3]
அறியப்படுவது
விருதுகள்
  • வேந்தியர் கழக ஆய்வாளர் (2012)
  • FMedSci
  • EMBO உறுப்பினர் (2013)
இணையதளம்
www.ch.cam.ac.uk/group/shankar

கல்வி

இந்தியாவில் சென்னை நகரில் 1966 இல் பிறந்த சங்கர் பாலசுப்பிரமணியன் ஐக்கிய முடியரசுக்கு 1967இல் அவரது பெற்றோர்களுடன் புலம்பெயர்ந்தார். கேம்பிரிட்ச் பிட்சுவில்லியம் கல்லூரியில் இயல் அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் (1985-88) பெற்றபின் தொடர்ந்து பேரா. கிறிஸ் ஆபெல் வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார்.[15]

சர் பட்டம்

அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் பாலசுப்பிரமணியனின் தொண்டுகளைப் பாராட்டி 2017 புத்தாண்டுப் பட்டம் வழங்கலில் பிரித்தானிய முடியரசு அவருக்கு சர் பட்டம் கொடுத்துப் பாராட்டியது.[16]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "BALASUBRAMANIAN, Prof. Shankar". Who's Who 2014, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2014; online edn, Oxford University Press. http://www.ukwhoswho.com/view/article/oupww/whoswho/U256669. 
  2. Huppert, J. L.; Balasubramanian, S. (2005). "Prevalence of quadruplexes in the human genome". Nucleic Acids Research 33 (9): 2908–2916. doi:10.1093/nar/gki609. பப்மெட்:15914667. 
  3. வார்ப்புரு:Cite thesis
  4. Balasubramanian, S (2007). "From DNA to mountain climbing. Shankar Balasubramanian talks to Alison Stoddart about his research and other interests". Molecular bioSystems 3 (5): B37. பப்மெட்:17582897. 
  5. Balasubramanian, S (2013). "An interview with Shankar Balasubramanian". Trends in Biochemical Sciences 38 (4): 170–1. doi:10.1016/j.tibs.2013.02.006. பப்மெட்:23522090. 
  6. University of Cambridge, 2011.
  7. 7.0 7.1 University of Cambridge, 2013.
  8. Cancer Research UK Cambridge Institute, University of Cambridge, 2012.
  9. Trinity College, Cambridge, 2013.
  10. வார்ப்புரு:Scopus
  11. Illumina, 2013.
  12. Bentley, D. R.; Balasubramanian, S.; Swerdlow, H. P.; Smith, G. P.; Milton, J.; Brown, C. G.; Hall, K. P.; Evers, D. J. et al. (2008). "Accurate whole human genome sequencing using reversible terminator chemistry". Nature 456 (7218): 53–59. doi:10.1038/nature07517. பப்மெட்:18987734. 
  13. Cambridge Epigenetix, 2013.
  14. "Shankar BALASUBRAMANIAN". London: Companies House இம் மூலத்தில் இருந்து 2016-07-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160706081324/https://beta.companieshouse.gov.uk/officers/Ba6y-nMuKv3KG3r7164IhB0Nrs8/appointments. 
  15. "Fitz alumni on top science list". Fitzwilliam College. 2014 இம் மூலத்தில் இருந்து 2014-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222004916/http://www.fitz.cam.ac.uk/about/newsitem-3-198. பார்த்த நாள்: 6 பெப்ரவரி 2014.