சங்கர் சங்கரமூர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சங்கர் சங்கரமூர்த்தி
சங்கர் சங்கரமூர்த்தி
இயற்பெயர்/
அறியும் பெயர்
சங்கர் சங்கரமூர்த்தி
பிறந்தஇடம் தென்காசி, தமிழ்நாடு
இறப்பு செப்டம்பர் 9, 2012
(அகவை 82)
பணியகம் பிபிசி தமிழோசை
அறியப்படுவது வானொலி ஒலிபரப்பாளர்

சங்கர் சங்கரமூர்த்தி (இறப்பு: செப்டம்பர் 9, 2012, அகவை 82) பிபிசி தமிழோசையின் முன்னாள் பொறுப்பாளரும், பிரபலமான வானொலி ஒலிபரப்பாளரும் ஆவார். ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்டவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர்.

தமிழோசையில் பணி

தமிழ்நாடு, தென்காசியில் பிறந்த சங்கரமூர்த்தி 1966 முதல் 1991 வரை தமிழோசையில் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது. அக்காலகட்டத்தில் சேக்சுப்பியரின் நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஓமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவில் தந்தார். பிரித்தானிய நாடகாசிரியர் பெர்னார்ட் சாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் சங்கர் தமிழில் மொழிபெயர்த்து தமிழோசையில் ஒலிபரப்பினார். இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடகங்களையும் இயற்றினார்.

தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் அவர் பல முறை சென்று நிகழ்ச்சிகளைத் தந்தார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சங்கர்_சங்கரமூர்த்தி&oldid=26401" இருந்து மீள்விக்கப்பட்டது