க. பஞ்சாங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
க. பஞ்சாங்கம்
க. பஞ்சாங்கம்
தலைவர்,
பாரதி அன்பர்கள் அறக்கட்டளை
பொதுக்குழு உறுப்பினர்,
சாகித்திய அகாதமி
பிறந்ததிகதி 4 பெப்ரவரி 1949 (1949-02-04) (அகவை 75)
பிறந்தஇடம் புத்தூர், பிரிக்கப்படாத இராமநாதபுரம் மாவட்டம்,
சென்னை மாகாணம்,
இந்திய மேலாட்சி
(தற்போது விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
தேசியம் தமிழர்
குடியுரிமை இந்தியர்
பெற்றோர் முத்தம்மாள்
கனியப்பன்
துணைவர்
  • பிரபாவதி (தி. 1979)
பிள்ளைகள் அன்புச்செல்வன், பாண்டியன்

க. பஞ்சாங்கம் அல்லது பஞ்சு என்ற புனைப்பெயரால் அறியப்படும் கனியப்பன் பஞ்சாங்கம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1949) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் மற்றும் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். கவிதை, புதினம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பன்முக ஆளுமை கொண்ட இவர் 51 நூல்களை எழுதியுள்ளார்.[1]

தொடக்க வாழ்க்கை

தற்போதைய விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தை அடுத்துள்ள புத்தூரில் 4 பிப்ரவரி 1949 அன்று முத்தம்மாள்-கனியப்பன் இணையருக்கு மகனாகப் பிறந்தார் பஞ்சாங்கம். தந்தையை இளம் அகவையில் இழந்தபின் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.[2]

கல்வி

தொடக்கக் கல்வியை புத்தூர் சரசுவதி ஆரம்பப் பாடசாலையிலும், உயர்கல்வியை தளவாய்புரம் பு.மு.மா. மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பின் விருதுநகர் இந்து நாடாரின் செந்தில்குமார நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பை (1965-66) நிறைவு செய்தார்.

1970 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், 1972 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஔவை துரைசாமி, சுப.அண்ணாமலை, மெ.சுந்தரம், ந. சஞ்சீவி உள்ளிட்ட அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக இருந்தனர்.

1983 இல் முனைவர் ஔவை நடராசன் மேற்பார்வையில் சிலப்பதிகாரத் திறனாய்வுகள் என்ற ஆய்வை மேற்கொண்டு 1988 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

பேராசிரியப் பணி

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உரையாளர் பணியில் 1972 இல் இணைந்தார்.

1973 இல் புதுவை அரசுப் பணியில் சேர்ந்து முதலாவதாக அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றினார். 1977 இல் தாகூர் கலைக் கல்லூரிக்குப் பணிமாறுதல் பெற்றார். 1988 முதல் 1991 வரை மீண்டும் காரைக்கால் கல்லூரியில் பணியாற்றினார்.

1991 முதல் 1993 வரை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும், 1993 முதல் 2011 வரை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆய்வு மையத்தில் இணைப்பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கியப்பணி

‘ஒட்டுப்புல்’ என்னும் கவிதைத்தொகுப்போடு தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய இவர் கவிதை, நாவல், திறனாய்வு, பெண்ணியம், தலித்தியம் முதலிய சமூக அரசியல் மற்றும் கலையிலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த ஆய்வு, கோட்பாட்டு மூல நூல்களின் மொழிபெயர்ப்பு என்று பன்முக ஆளுமையாக வளர்ந்தார். 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான காத்திரமான நூல்களை எழுதியவர். தன்னுடைய மாணவர்களை நவீனத் திறனாய்வு முறைமைகளில் ஈடுபடுத்தியவர். "வாழ்க்கை ஒரு பெரும்புனைவு என்றும் புதிர்த்தன்மையோடு ஓடிக்கொண்டிருக்கும் பேராறு...அதன் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றும் தொடர்ந்து கூறிவரும் பேராசிரியர் க.பஞ்சாங்கம், தனது ஆய்வுகளின் மூலம் அவற்றை நிரூபித்தார். கோட்பாட்டு ஆய்வுமுறைகளைப் பற்றிய இவரது கருத்தாக்கங்களைக் கட்டமைப்பதில் வாழ்க்கை பற்றிய இந்த அடிப்படைப் புரிதல்களே இவருக்குப் பெரிதும் உதவுகின்றன. இலக்கியம் போலவே திறனாய்வு என்பதும் ஒரு அரசியல் செயல்பாடு என்பதைப் புரிந்துகொண்டதால், படைப்பாளிகள் எப்போதுமே ஒடுக்கப்படவர்கள் பக்கமே இருக்க வேண்டும், அவர்கள் சார்பாக ஒரு இலக்கியப் பிரதியை அணுகித் தெளிவுபெற முடியும் என்பதைத் தனது திறனாய்வுகளின் வழியே நிரூபித்துவந்தார்.[3] [1]

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
1977 ஒட்டுப்புல் கவிதைத் தொகுப்பு
1982 மத்தியிலுள்ள மனிதர்கள் புதினம்
1988 இலக்கியத்தில் தொல்படிவம் மொழிபெயர்ப்பு

(மூலநூல்: கனடிய எழுத்தாளர் நார்த்ராப் பிரை இயற்றிய Archetypes in Literature)

1990 நூற்றாண்டுக் கவலைகள் கவிதைத் தொகுப்பு
தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு திறனாய்வு
1993 சிலப்பதிகாரத் திறனாய்வு வரலாறு திறனாய்வு
1994 பெண்ணெனும் படைப்பு – சில மானுடவியல் குறிப்புகள் மொழிபெயர்ப்பு

(Women’s Creation: Anthropological Perspective, Written by Elizabeth Tailor)

1995 மறுவாசிப்பில் கி. ராஜநாராயணன் திறனாய்வு
1999 தமிழா! – பாரதியுடன் ஓர் உரையாடல் திறனாய்வு
பெண்-மொழி-புனைவு:

பெண்ணியக் கட்டுரைகள்

2000 மகாகவி பாரதியாரின் பெண்ணியல் கட்டுரைகள் (தொகுப்பாளர்) திறனாய்வு
இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும்
2001 பயணம் கவிதைத் தொகுப்பு
2002 சிலப்பதிகாரம்: சில பயணங்கள் திறனாய்வு
2003 பாரதி – பன்முகப்பட்ட ஆளுமை (தொகுப்பு) திறனாய்வு
கி.ரா - 80 (தொகுப்பு)
நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல்
2004 ஒரு விமர்சகனின் பார்வையில் திறனாய்வு
தலித்துகள் – பெண்கள் – தமிழர்கள்
2005 ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் புதினம்
தொன்மத் திறனாய்வு திறனாய்வு
2006 ஹெலன் சீக்சு – புதிய பெண்ணியல் கோட்பாட்டாளர் திறனாய்வு
புனைவுகளும் உண்மைகளும்
2007 பெண் - மொழி - படைப்பு:

பெண்ணியக் கட்டுரைகள்

திறனாய்வு
சங்க இலக்கியம்
2008 ஒட்டுப்புல் கவிதைத் தொகுப்பு (மொத்தம்)
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் திறனாய்வு
பாரதியாரின் கலை இலக்கியக் கோட்பாடுகள்
2009 சங்க இலக்கியம் திறனாய்வு
க. பஞ்சாங்கம் கட்டுரைகள் ( I & II)
2010 ஊடகம் எனப்படும் குருட்டு மகிழ்ச்சி: (மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்) மொழிபெயர்ப்பு

(பல்வேறு கட்டுரைகள்)

சிலப்பதிகாரத் திறனாய்வு வரலாறு திறனாய்வு
மொழி தரும் வலியும் விளையாட்டும்
பின் காலனித்துவ நோக்கில் மனோன்மணியம்
2012 இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும் திறனாய்வு :அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்
2013 புதிய கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம் திறனாய்வு
2014 அழுததும் சிரித்ததும் திறனாய்வு :அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தமிழ்: ஒரு மொழி, ஒரு நிலம், ஒரு வாழ்வு (கட்டுரைத் தொகுப்பு)
தமிழில் திறனாய்வுப் பனுவல்கள் (தொகுப்பு) (மொழிபெயர்ப்பு மட்டும்)

(ஆசிரியர் -தி. சு. நடராசன்)

2015 இன்றைய இலக்கியம் என்பது தலித்திய இலக்கியமே திறனாய்வு
2016 அக்கா: சுய புனைவு நாவல் புதினம் :அன்னம் - அகரம் வெளியீட்டகம்
பின் காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில் ஒரு நூற்றாண்டுத் தமிழிலக்கியம் திறனாய்வு
2017 புதிய வெளிச்சத்தில் தமிழிலக்கிய வரலாறு திறனாய்வு :அன்னம் - அகரம் வெளியீட்டகம்
ஆய்வு நெறிமுறைகள்
கவிக்கோ அப்துல் ரகுமான்: கவிதைக்கனியால் உண்ணப்பட்டவர்

(நீண்டதொரு நேர்காணலும் சில கட்டுரைகளும்)

2018 நான் எப்படி எழுதுகிறேன் மொழிபெயர்ப்பு

(மூலநூல்: இத்தாலிய எழுத்தாளர் உம்பெர்த்தோ எக்கோ இயற்றிய How I Write)

அருட்செல்வர் நா. மகாலிங்கம்மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
சில நாவல்களும் என் வாசிப்புகளும் திறனாய்வு :அன்னம் - அகரம் வெளியீட்டகம்
2019 நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும் திறனாய்வு :அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தமிழ்ச் சிறுகதைகளும் மனிதப் பெருவெளியும்

(திறனாய்வுக் கட்டுரைகள்)

பரிசல் வெளியீடு
மொழியாக்கமெனும் படைப்புக்கலை (மொழிபெயர்ப்பாளர்களின் நேர்காணல்) திசை எட்டும்
இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் – இன்றைய உரைநடைத் தமிழில் :அன்னம் - அகரம் வெளியீட்டகம்

பதவிகள்

சாகித்திய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினராக 2003-2007 காலகட்டத்தில் பதவி வகித்தார். புதுச்சேரியிலுள்ள பாரதி அன்பர்கள் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.[4] , .

க.பஞ்சாங்கம் பற்றிய நூல்கள்

ஆண்டு தலைப்பு இயற்றியவர் பதிப்பகம்
2008 க. பஞ்சாங்கத்தின் படைப்புலகம்

(மணிவிழா சிறப்பு வெளியீடு)

கே. பழனிவேலு

(தொகுப்பு)

2014 க. பஞ்சு-வின் திறனாய்வுப் பார்வை முனைவர் செந்தாமரை
க. பஞ்சுவின் பெண்ணிய, தலித்திய,

மார்க்சியப் பார்வை,

2015 பேரா. க. பஞ்சாங்கம், முனைவர் தி. குமார்.
இலங்குநூல் செயவலர்

முனைவர் க. பஞ்சாங்கம்

நாகரத்தினம் கிருஷ்ணா

விருதுகள்

ஆண்டு விருது முகமை குறிப்பு
2000 கம்பன் புகழ் விருது புதுச்சேரி அரசு இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும் என்ற நூலுக்காக
திருப்பூர் தமிழ்ச் சங்க விருது திருப்பூர் தமிழ்ச் சங்கம் பெண்-மொழி-புனைவு என்ற நூலுக்காக
2002 காசியூர் ரெங்கம்மாள் விருது பயணம் கவிதைத்தொகுப்பிற்காக
2012 சிறந்த திறனாய்வாளருக்கான பேரா.கா.சிவத்தம்பி கணையாழி விருது
2016 சிறந்த திறனாய்வாளருக்கான "மேலும்" சிற்றிதழ் விருது
2019 “புதுமைப்பித்தன் நினைவு” விருது (24வது) ‘விளக்கு’ இலக்கிய அமைப்பு திறனாய்வு மற்றும் ஆய்வுக்கட்டுரைகளுக்காக[1][5][6][7]

தனி வாழ்க்கை

1979-இல் பிரபாவதி என்பவரை மணந்தார் பஞ்சாங்கம். இவர்களுக்கு அன்புச்செல்வன், பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு, அந்திமழை, அக்டோபர் 14 , 2020
  2. 2.0 2.1 "பேராசிரியர் க.பஞ்சாங்கம்" (in ta). 2013-04-24. https://muelangovan.wordpress.com/2013/04/24/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/. 
  3. "2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம் | திண்ணை" (in en-US). https://puthu.thinnai.com/2019%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/. 
  4. "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan" (in ta). http://muelangovan.blogspot.com/2013/04/. 
  5. கவிஞர் கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு இலக்கிய விருதுகள்’ அறிவிப்பு!
  6. "2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்" (in en-US). http://puthu.thinnai.com/?p=41089. 
  7. "அமெரிக்க தமிழர் விளக்கு விருதுக்கு கலாப்ரியா, பேரா.பஞ்சாங்கம் தேர்வு". 2020-10-15. https://www.dinamalar.com/news_detail.asp?id=2633687. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=க._பஞ்சாங்கம்&oldid=3673" இருந்து மீள்விக்கப்பட்டது