க. சு. ரவி
Jump to navigation
Jump to search
கே.எஸ்.ரவி
| |
---|---|
பிறந்தது | 1959 |
இறந்தார் | செப்டம்பர் 6, 2010 |
தொழில் | திரைப்பட இயக்குனர் |
க. சு. ரவி (1959 – 2010) என்பவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது படங்களில் நாடகங்கள் முதல் அதிரடித் திரைப்பட வகைகளின் கலவை இருந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 1959ஆம் ஆண்டு ரவி பிறந்தார். இவர் முன்னாள் தரைப்படை வீரரான கற்பூர சுந்தரம் மற்றும் வசந்தா ஆகியோருக்கு பிறந்தவர். இவருக்கு ராஜன், கிருபாகரன், லதா என மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் சுமதியை என்பாரை மணந்தார். இந்த இணையருக்கு ஐசுவர்யா என்ற மகள் உள்ளார்.[1]
இறப்பு
ரவி செப்டம்பர் 6, 2010 அன்று மாரடைப்பால் இறந்தார்.[2]
விருதுகள்
ரவி தனது முதல் படமான ஆக்ரஹம் படத்திற்காக மிகவும் பாராட்டப்பட்ட " நந்தி விருதை " பெற்றார்.
திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | பணி | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
இயக்குநர் | எழுத்தாளர் | ||||
1993 | ஆக்ரஹம் | தெலுங்கு | எவனா இருந்தா எனக்கென்ன என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது | ||
1994 | ஆனஸ்ட் ராஜ் | தமிழ் | இந்தியில் ரக்ஷக் என்ற பெயரில் மறுபதிப்புச் செய்யப்பட்டது | ||
1996 | மிஸ்டர் ரோமியோ | தமிழ் | தெலுங்கு மற்றும் இந்தியில் மறுபதிவு செய்யப்படுகிறது | ||
1999 | என் சுவாசக் காற்றே | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "தமிழ் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவி மரணம்". 7 September 2010. Archived from the original on 5 August 2021. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
- ↑ Ravi, Bhama Devi (6 September 2010). "Film director K S Ravi, in whose films Shilpa Shetty, Isha Kopikkar, Vijayakanth Arvind Swamy died of cardiac arrest in Chennai on Monday. Last rites on Tuesday in Chennai. He was 45.". The Times of India இம் மூலத்தில் இருந்து 25 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220325145245/https://timesofindia.indiatimes.com/film-director-k-s-ravi-in-whose-films-shilpa-shetty-isha-kopikkar-vijayakanth-arvind-swamy-died-of-cardiac-arrest-in-chennai-on-monday-last-rites-on-tuesday-in-chennai-he-was-45-/articleshow/6506979.cms.