ஆள்கூறுகள்: 23°32′04″N 93°10′59″E / 23.5345°N 93.1830°E / 23.5345; 93.1830

கௌசல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கௌசல்

மாவட்டத் தலைமையிடம்
khawzawl.nic.in
கௌசல் is located in மிசோரம்
கௌசல்
கௌசல்
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் கௌசலின் அமைவிடம்
கௌசல் is located in இந்தியா
கௌசல்
கௌசல்
கௌசல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°32′04″N 93°10′59″E / 23.5345°N 93.1830°E / 23.5345; 93.1830
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்கௌசல் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்78 km2 (30 sq mi)
ஏற்றம்
1,187 m (3,894 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,022
 • தரவரிசை8th
 • அடர்த்தி141/km2 (370/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமிசோ மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
796310
வாகனப் பதிவுMZ-04
கோப்பென் காலநிலை வகைப்பாடுஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை

கௌசல் (Khawzawl), வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள கௌசல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது மிசோரம் மாநிலத் தலைநகரான அய்சால் நகரத்திற்கு தென்கிழக்கே 128 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கிழக்கு இமயமலைத் தொடரில் 1187 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,306 குடியிருப்புகள் கொண்ட கௌசல் பேரூராட்சியின் மக்கள் தொகை 11,022 ஆகும். அதில் 5,616 ஆண்கள் மற்றும் 5,406 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15.84% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 96.64 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0.01% மற்றும் 70% வீதம் உள்ளனர். இந்து சமயத்தினர் 1.05%, இசுலாமியர் 0.24%, கிறித்தவர்கள் 98.51% மற்றும் பிற சமயத்தினர் 0.20% வீதம் உள்ளனர்.[1]இந்நகரத்தில் மிசோ மொழி மற்றும் ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.

கல்வி

  • கௌசல் அரசுக் கல்லூரி[2]

மேற்கோள்கள்

  1. Khawzawl Town Population Census 2011
  2. "Khawzawl College". Archived from the original on 12 September 2017. Retrieved 8 September 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=கௌசல்&oldid=348694" இலிருந்து மீள்விக்கப்பட்டது