கோ. வில்வபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயற்பெயர்/
அறியும் பெயர்
கோ.வில்வபதி
Ko.Vilvapathi
பிறப்புபெயர் வில்வபதி
பிறந்ததிகதி 1921
பிறந்தஇடம் திருவண்ணாமலை செய்யாறு,
தமிழ்நாடு,
 இந்தியா.
தேசியம் இந்தியர்,
அறியப்படுவது எழுத்தாளர், பேச்சாளர்
பெற்றோர் கோவிந்தசாமி.(தந்தை)
அபரஞ்சி (தாய்)

கோ. வில்வபதி (Ko.Vilvapathi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளர், எழுத்தாளர், பதிப்பாளர் என்ற பன்முகங்கள் கொண்ட ஒரு தமிழறிஞராவார். இலக்கியம், இலக்கணம் கற்பிப்பதில் இவர் சிறந்து விளங்கினார். இவர் தலைமையில்தான் மாணவர் மன்றப் பொன் விழா, மயிலை சிவமுத்து சிலை திறப்பு விழா, கட்டடத் திறப்பு விழா போன்ற விழாக்கள் நடைபெற்றன.

திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கும் கம்பராமாயணத்தின் பால காண்டம், அயோத்தியா காண்டம் [1]ஆகிய பகுதிகளுக்கும் தெளிவுரை எழுதியுள்ளார். காலத்திற்கு ஏற்றவாறு தமிழ் மொழியின் மாறுதலையும் வளர்ச்சியையும் உணர்ந்து, தம் உரையில் உரிய எடுத்துக்காட்டுகளையும் தேவையான மேற்கோள் களையும் குறிப்பிட்டு எழுதுவது கோ. வில்வபதியின் தனித்திறனாகும்.

மாணவர் மன்றத்தின் தலைவராக தொண்டு செய்த மயிலை சிவமுத்து வில்வபதியை மன்றக் கண்மணி என்றும் உரைமணி என்றும் பாராட்டிச் சிறப்பித்துள்ளார்.[2]

புலவர் கோ. வில்வபதி செந்தமிழ்ச்செம்மல், பெரும்புலவர் கோ.வில்வபதி என்று பல பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டார்.[3]தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் நூலாசிரியராகவும் மேலாய்வாளராகவும் பணிபுரிந்தார். நித்திலக் குவியல் என்னும் திங்கள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரத்தில் கோவிந்தசாமி அபரஞ்சி தம்பதியருக்கு 1921 ஆம் ஆண்டு சூன் மாதம் பனிரெண்டாம் தேதி வில்வபதி பிறந்தார்.

திருவையாற்று அரசர் கல்லூரியில் பயின்று புலவர் வகுப்பில் இடை நிலைத் தேர்வில் முதல் நிலையும், இறுதி நிலைத் தேர்வில் இரண்டாம் நிலையும் பெற்றார்.

சென்னை, இந்து தியலாஜிகல் மேனிலைப் பள்ளியில் 37 ஆண்டுக்காலம் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

பெரும்புலவர் என்று அழைக்கப்பட்ட கோ.வில்வபதி 5-10-1991 அன்று காலமானார்.

எழுதிய நூல்கள்

  1. சிலையாகி நிற்கும் செம்மல்கள்
  2. காவிரி
  3. நன்னெறி கதைகள்
  4. கம்ப இராமாயணம் பால காண்டம் தெளிவுரை[4]
  5. முல்லை பாட்டு இனிய எளிய உரை.
  6. குறள் விளக்க கதைகள்.
  7. திருக்குறள் விளக்கவுரை
  8. மூவர் தமிழ் வாசகம்[5][6]
  9. கௌதம புத்தர் (நாடகம்)
  10. மூவர் தமிழ் இலக்கணம்[7]
  11. முல்லைப்பாட்டு –இனிய எளிய உரை
  12. நன்னூல் மூலமும் உரையும்[8]

மேற்கோள்கள்

  1. "Back Matter, Books at Iowa, No.14". Books at Iowa. 1971-04. எண்ணிம ஆவணச் சுட்டி:10.17077/0006-7474.1327. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. https://thfcms.tamilheritage.org/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/
  3. Cummings, Joel (2003-06). "Safari Tech Books Online2003335Safari Tech Books Online. Ann Arbor, MI: ProQuest 2002 to date. Variable pricing URL: http://proquest.safaribooksonline.com Last visited March 2003". Reference Reviews. pp. 53–54. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1108/09504120310490813. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |title= (help)
  4. "Noolulagam » %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2 %E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D » Page 1". பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  5. "மூவர் தமிழ் வாசகம்". www.tamildigitallibrary.in (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  6. வில்வபதி, கோ (1955). "மூவர் தமிழ் வாசகம்". வர்தா பதிப்புக் கழகம் (சென்னை). பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  7. "மூவர் தமிழ் இலக்கணம் by வில்வபதி, கோ". books.readingbharat.com. Archived from the original on 2021-04-14. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14. {{cite web}}: Text "Reading Bharat" ignored (help)
  8. வில்வபதி, கோ (2016). "நன்னூல்: மூலமும் உரையும்". Paḻaniyappā piratars. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
"https://tamilar.wiki/index.php?title=கோ._வில்வபதி&oldid=3994" இருந்து மீள்விக்கப்பட்டது