கோ. பாலசுப்ரமணியன்
கோ. பாலசுப்ரமணியன் (G. Balasubramanian, பிறப்பு: 15 ஏப்ரல் 1959) தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 4 அக்டோபர் 2018 [1] [2] [3] முதல் 3 அக்டோபர் 2021 வரை பணியாற்றியுள்ளார்.
பிறப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் உள்ள காடுவாக்குடியில் பிறந்த இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியலிலும் (1983) தமிழ் இலக்கியத்திலும் (1989) முதுகலை பயின்று, முனைவர் பட்டம் (1989) பெற்றுள்ளார்.[3]
பணிகள்
ஆய்வுப்பணிகள்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் நில அறிவியல் துறையில் திட்ட ஆய்வு உதவியாளராகவும் (1987-89), கோழிக்கோடு பல்கலைக்கழக மலையாளத் துறையில் தமிழ் விரிவுரையாளராகவும், இணைப்பேராசிரியராகவும் (1989-2006), குப்பம் திராவிட பல்கலைக்கழக திராவிட மற்றும் கணினி மொழியியல் இணைப்பேராசிரியராகவும், பேராசிரியராகவும் (2006-2009, 2009-11), போலந்து நாட்டிலுள்ள வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையில் வருகைதரு பேராசிரியராகவும் (2011-16) பணியாற்றியுள்ளார். [1] திராவிடப் பல்கலைக்கழகத்தில் இணைவேந்தராகப் (2016-18) பணியாற்றியுள்ளார். [4] மொழியியல், தமிழியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். [5] சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளித்துள்ளார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தேர்வாளராகவும் இருந்துள்ளார். [6] செக்கோஸ்லோவாகியா (2011), ஹாங்காங் (1997) ஆகிய நாடுகளுக்கு திட்டப்பணியாகவும், கருத்தரங்கில் கலந்துகொள்ளவும் சென்றுள்ளார். [3]
மொழிபெயர்ப்பு
தமிழிலிருந்து மலையாளத்திலும் மலையாளத்திலிருந்து தமிழிலும் புதினங்களையும், சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். [5] வாச்சக் அவர்களின் இலக்கியத் திறனாய்வு நூலை மொழிபெயர்த்துள்ளார். [6] தமிழ் (தாய்மொழி), ஆங்கிலம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளறிந்தவர். [3]
பிற ஆய்வுகள்
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரப்பிரதேசத்தில் சித்தூர், கர்நாடகாவில் கோலார் போன்ற எல்லை மாவட்டங்களில் அழியும் நிலையிலிருக்கும் மொழிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். மொழி சந்தித்து வரும் ஆபத்துகளை மதிப்பீடு செய்கின்ற மொழியியல் ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.[1] தேசிய மற்றும் சர்வதேச அளவில் 20க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். [4]
வெளியிட்ட நூல்கள்
- சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி தமிழ்ப்புதினத்தின் மலையாள மொழிபெயர்ப்பு, Zero Degree, Tamil Novel by Charuniveditha, Translated by G.Balasubramanian and P.M.Girish, First Impression, September 2001 [7]
- Studies in Linguistics, Prof.T.B.Venugopala Panicker Felicitation Volume, (Ed) University of Calicut, 2006 [8]
- சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு, யரோஸ்லவ் வாச்சக், தமிழில் கோ.பாலசுப்ரமணியன், அடையாளம்,புத்தாநத்தம், முதற்பதிப்பு, 2015 [9]
- மொழியியல் ஒப்பு நோக்கு, ஸ்ரீவெங்கடேஸ்வரா பப்ளிகேஷன்ஸ், குப்பம், முதற்பதிப்பு, 2018 [10]
- Reflections in Applied Linguistics, Excel India Publishers, New Delhi, First Impression, August 2018 [11]
விருதுகள்
- பல்கலைக்கழக நல்லாசிரியர் விருது (ஆந்திர அரசு, 2013) [5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி.பாலசுப்பிரமணியன் நியமனம், தினத்தந்தி, 30 செப்டம்பர் 2018
- ↑ தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு, தினமணி, 5 அக்டோபர் 2018
- ↑ 3.0 3.1 3.2 3.3 G.Balasubramanian
- ↑ 4.0 4.1 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம், தினமணி, 30 செப்டம்பர் 2018
- ↑ 5.0 5.1 5.2 சங்க இலக்கியத்தில் இயற்கைக்குறியீடு, அடையாளம், புத்தாநத்தம், ப.i.
- ↑ 6.0 6.1 ஒப்பு நோக்கு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பப்ளிகேசன்ஸ், குப்பம், பின் அட்டை
- ↑ Zero Degree was translated into Malayalam in 1999 by Dr G.Balasubrahmanian and Dr P.M.Gireesh
- ↑ Studies in linguistics : Prof. T.B. Venugopala Panicker felicitation volume, University of Wisconsin-Madison Libraries
- ↑ நூல் அரங்கம், வரப்பெற்றோம், தினமணி, 1 சூலை 2019
- ↑ இந்த வாரம் கலா ரசிகன், தினமணி, 14 ஏப்ரல் 2019
- ↑ Reflections on Applied Linguistics[தொடர்பிழந்த இணைப்பு]