கோ. நரசிம்மன்
கோபாலன் நரசிம்மன் | |
---|---|
பிறப்பு | சென்னை, பிரித்தானிய இந்தியா | 28 பெப்ரவரி 1916
இறப்பு | 5 சூலை 1977 சென்னை, இந்தியா | (அகவை 61)
பணியகம் | இதழியலாளர் |
பிள்ளைகள் | என். ராம், ந. இரவி, ந. முரளி |
கோபாலன் நரசிம்மன் (Gopalan Narasimhan) (28 பிப்ரவரி 1916 - 5 ஜூலை 1977) ஓர் இந்திய பத்திரிகையாளரும், தொழில்முனைவோரும் ஆவார். இவர் 1959 முதல் 1977 இல் தான் இறக்கும் வரை தி இந்து பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். இந்து ஆங்கில நாளிதழின் முதன்மை ஆசிரியரான என். ராம் என்பவரின் தந்தையாவார் .
ஆரம்ப கால வாழ்க்கை
நரசிம்மன், சென்னையில் பிப்ரவரி 28, 1916 அன்று க. கோபாலன் -இரங்கநாயகி ஆகியோருக்கு பிறந்தார். கோபாலன் கஸ்தூரி இவரது இளைய சகோதரனாவார்.
இவர், சென்னை, மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர், தனது சிறு வயதிலேயே இந்துவில் சேர்ந்தார். 1937 முதல் 1959 வரை இந்துவின் மேலாளராக இருந்தார். 1959 இல் இவரது மாமா கே. சீனிவாசன் இறந்தபோது, நரசிம்மன் பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநரானார்.
தொழில்
இவர், 1959 முதல் 1977 வரை இந்துவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். 1956-57 காலப்பகுதியில் இந்திய மற்றும் கிழக்கு செய்தித்தாள் சங்கத்தின் (ஐ.என்.எஸ்) தலைவராகவும், 1955 முதல் 1959 வரை இந்தியாவின் தணிக்கை பணியகத்தின் தலைவராகவும், பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆசியப் பத்திரிகை ஆகியவற்றின் அறக்கட்டளையின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
இவரது மூத்த மகன் என். ராம் 1977 முதல் தி இந்துவின் நிர்வாக-இயக்குநராகவும், 2003 ஜூன் 27 முதல் 2012 ஜனவரி 18 வரை அதன் முதன்மை ஆசிரியராகவும் இருந்தார். இவரது இளைய மகன் ந. இரவி 1991 – 2003 வரை முதன்மை ஆசிரியராக பணியாற்றினார்.
இறப்பு
நரசிம்மன் ஜூலை 5, 1977 அன்று 61 வயதில் மெட்ராஸில் மாரடைப்பால் இறந்தார். [1]
இதையும் காண்க
- எ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சௌ. பார்த்தசாரதி
- கஸ்தூரி பாலாஜி
- கோபாலன் கஸ்தூரி
- க. கோபாலன்
- மு. வீரராகாவாச்சாரியார்
- எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார்
- சீ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சீ. இரங்கராஜன்
- கஸ்தூரி சீனிவாசன்
மேற்கோள்கள்
- ↑ The New York Times biographical service, Volume 8. New York Times & Arno Press. 1977. p. 1000.
குறிப்புகள்
- The Times of India directory and year book including Who's who. 1971. p. 798.