கோ. சண்முகநாதன்
Jump to navigation
Jump to search
கோ. சண்முகநாதன் கோதண்டபாணி சண்முகநாதன் (G. Shanmuganathan) என்பவர் மு. கருணாநிதியின் நேர்முக உதவியாளராவார்.[1]
வாழ்க்கை வரலாறு
- சண்முகநாதன் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமும் தற்போதைய திருவாரூர் மாவட்டமான திருகண்ணமங்கையில் காவல்துறை அதிகாரி கோதண்டபாணியின் மகனாக பிறந்தார்.
- சண்முகநாதன் தனது ஆரம்பக் காலத்தில் பட்டபடிப்பை முடித்து விட்டு அரசு பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு காவல் துறையில் சுருக்கெழுத்தாளராக தனது சொந்த ஊரிலே பணியாற்றிவந்தார்.
- பின்பு தமிழக சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் காமராஜரின் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்களின் அவை குறிப்பு பேச்சுகளை சுருக்கெழுத்தில் எழுதி அதை தமிழக சட்டமன்ற அரசு தலைமைக்கு அனுப்பும் பணியில் இருந்தார்.
- பின்பு 1967 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக வெற்றி பெற்ற தி.மு.க ஆட்சியில் முதல்வர் அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் தமிழக பொதுப்பணித்துறை மந்திரியாக பொறுப்பேற்ற தலைவர் கருணாநிதி சண்முகநாதனின் சுருக்கெழுத்து கோப்புகளை பார்வையிட்டு மிகவும் வியந்து தன் உதவியாளராக 1967 முதல் தன்னுடன் இணைத்து கொண்டு தனது வாழ்நாளின் இறுதி காலம் வரை மு. கருணாநிதியின் அந்தரங்க பொறுப்பாளராக (Personal Sercortry) வைத்து கொண்டார்.
- பின்பு 1977 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழக முதல்வராக எம். ஜி. ஆர் பொறுப்பேற்ற பின் எம். ஜி. ஆர் அவர்களே சண்முகநாதனை தனது உதவியாளராக வரவேண்டும் என்று கேட்ட கொண்டபோது சண்முகநாதன் அவர்கள் எதிர்கட்சி தலைவர் கருணாநிதியின் உதவியாளராகவே தன்னை அடையாளம் செய்து கொண்டார்.
- இவர் தனது வாழ்நாளின் இறுதி வரை முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவர் மு. கருணாநிதியின் நேர்முக உதவியாளராகவும் செயல்பட்டுவந்தார்.
மறைவு
- உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில், திசம்பர் 21, 2021 அன்று காலமானார்.[2]