கோளியூர் கிழார் மகனார் செழியனார்
Jump to navigation
Jump to search
கோளியூர் கிழார் மகனார் செழியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது நற்றிணை நூலில் 383 எண்ணுள்ள பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
- செழியன் என்னும் பெயர் பாண்டிய அரசனைக் குறிக்கும்.
- பாடல் சொல்லும் செய்தி:
தலைவன் வரும் வழியைப்பற்றித் தோழியும் தலைவியும் தலைவனுக்குக் கேட்குபடி பேசிக்கொள்கின்றனர். கல்லுப் பாறைக்குப் பக்கத்தில் வேங்கைமரம். அந்த வேங்கையின் பூமாலை போல் உடலில் கோடுகளை உடைய புலி. அந்தப் புலி தன் பெண்புலி பசித்திருக்கிறது என்பதற்காக யானையை வீழ்த்திவிட்டு இடி முழக்கம் போல உரறும். அந்த வழியில்தான் தலைவன் தலைவியை நாடி வருகிறான். நள்ளிரவில் வருகிறான். பாம்பு திரியும் வழியில் வருகிறான். இப்படிப்பட்ட வழியில் தலைவன் வருவதால் தலைவியும், தோழியும் அஞ்சுவதாகத் தோழி குறிப்பிடுகின்றாள்.