கோல்மால் (1998 திரைப்படம்)
கோல்மால் | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | கே. எஸ். ரவிக்குமார் சி. சுதாகர் |
கதை | செல்வா எஸ். என். சக்திவேல் (உரையாடல்) |
இசை | பாலபாரதி |
நடிப்பு | செல்வா மோனிகா நெருகர் |
ஒளிப்பதிவு | எம். ஆர். அரிகாந்த் |
படத்தொகுப்பு | பி. ரமேஷ் |
கலையகம் | நார்த் ஈஸ்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 5, 1998 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோல்மால் (Golmaal) என்பது 1998 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். செல்வா இயக்குநராக அறிமுகமான, இப்படத்தில் செல்வா, புதுமுகம் மோனிகா நெருகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இதில் ராசன் பி. தேவ், கே. எஸ். ரவிக்குமார், தாமு, சத்ய பிரகாஷ், மகாநதி சங்கர், பானு பிரகாஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார், சி. சுதாகர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படம், பால பாரதியால் இசை அமைக்கபட்டது. படம் 1998 5 சூனில் வெளியிடப்பட்டது.[1][2]
கதை
சொல்லும்படி ஒன்றும் இல்லாத இளைஞனான கணேஷ் ( செல்வா ) ஐஸ்வர்யாவை (மோனிகா நேருக்கர்) காதலிக்கிறான். அவளது தந்தை கர்னல் ராஜப்பா ( ராசன் பி. தேவ் ) காதலை வெறுக்கும் கண்டிப்பான தந்தை. கணேசும் ஐஸ்வர்யாவும் ஓடிப்போக முடிவு செய்துருக்கும் நிலையில் அவளது தந்தைக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா அவனை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிடுகிறாள். கர்னல் ராஜப்பாவின் உடல்நிலை மோசமடைகிறது, எனவே அவர் தனது மகளின் திருமணத்தை விரைவில் முடிக்க ஏற்பாடு செய்கிறார். மூன்று பயங்கரவாதிகள் (சத்ய பிரகாஷ், மகாநதி சங்கர், பானு பிரகாஷ்) சிறையில் இருந்து தப்பிக்கின்றனர். கர்னல் ராஜப்பாவின் வீட்டில் ஐஸ்வர்யாவின் திருமண ஏற்பாடு நடக்கும் போது, கணேஷ் அவளது அறைக்குள் நுழைந்து அவளை சமாதானப்படுத்த முயற்சிக்கிறான். இதற்கிடையில், மூன்று பயங்கரவாதிகள் அவனைத் தொடர்ந்து அந்தத வீட்டிற்குள் நுழைகின்றனர். இந்த பயங்கரவாதிகள் வேடத்தில் வந்தவர்கள் கணேசின் நண்பர்களாவர். இவர்கள் உதவியுடன் கணேஷ் தனது காதலி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறான். பின்னர் என்ன வெளிப்படுகிறது நடக்கிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.
நடிகர்கள்
- செல்வா கணேசாக
- மோனிகா நேருக்கர் ஐஸ்வர்யாவாக
- ராசன் பி. தேவ் கர்னல் ராஜப்பாவாக
- கே. எஸ். ரவிக்குமார் ஏ.சி.பி பைக் பாண்டியன் (பெரிய பாண்டி) மற்றும் சின்னா பாண்டியாக
- தாமு தாமுவாக
- சத்தியா பிரகாஷ்
- மகாநதி சங்கர் பங்காருவாக
- பானிபிரகாஷ் கௌதமாக
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- டெல்லி கணேஷ் கணேசின் தந்தை முத்து கிருஷ்ணனாக
- தியாகு விஸ்வநாத்தாக
- குமரிமுத்து தாமுவின் தந்தையாக
- டைப்பிஸ்ட் கோபு
- பல்லவி ஐஸ்வர்யாவின் மைத்துனி
- அபிதா ஐஸ்வர்யாவின் சகோதரி ரேஷ்மாவாக
- சங்கீதா ஐஸ்வர்யாவின் தாயாக
- சீலா ஐஸ்வரியாவின் உறவினர்
- இராஜசேகர் உள்துறை அமைச்சராக
- ஜெனிஷா
- சிட்டி
- பாபூஸ் டைசனாக
- காளிதாஸ்
- ராதிகா சரத்குமார் சிறப்புத் தோற்றத்தில்
இசை
திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் ஆகியவற்றிற்கான இசையை இசையமைப்பாளர் பாலபாரதி மேற்கொண்டார். 1998 இல் வெளியான இந்த படத்தின் பாடல் பதிவில், அறிவுமதி, வாசன், திருமாறன் ஆகியோர் எழுதிய நான்கு பாடல்கள் இருந்தன.
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | 'ஏய் பாப்பா' | சுரேஷ் பீட்டர்ஸ் | 4:24 |
2 | 'நீ பேசும்' | ஹரிஹரன், சித்ரா | 4:22 |
3 | 'ட்விங்கிள் ட்விங்கிள்' | அனுராதா ஸ்ரீராம் | 4:24 |
4 | 'வாடா வான' | சந்திரபோஸ் | 4:29 |
மேற்கோள்கள்
- ↑ "Filmography of gol mall". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Golmall (1998) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.