கோபால் பிரசாத் வியாசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பண்டித

கோபால் பிரசாத் வியாசு
Gopal Prasad Vyas
இயற்பெயர்
गोपाल प्रसाद व्यास
பிறப்பு(1915-02-13)13 பெப்ரவரி 1915 [lower-alpha 1]
மகமத்பூர், மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு28 மே 2005(2005-05-28) (அகவை 90)
குல்மோகர் பூங்கா புது தில்லி, இந்தியா
தொழில்கவிஞர், எழுத்தாளர், இதழியளாளர்
மொழிஇந்தி
செயற்பட்ட ஆண்டுகள்1937–2005
குறிப்பிடத்தக்க படைப்புகள்Ārām Karo, Patni Ko Parameshwar Māno, To Mein Kya Karoon, Khooni Hastākshar
குறிப்பிடத்தக்க விருதுகள்
துணைவர்அஷர்பி தேவி
பிள்ளைகள்6
குடும்பத்தினர்
  • பிரஜ்கிஷோர் சாசுதிரி (தந்தை)
  • சமேலி தேவி (அம்மா)

கோபால் பிரசாத் வியாசு (Gopal Prasad Vyas)(13 பிப்ரவரி 1915 - 28 மே 2005) என்பவர் இந்தியக் கவிஞர். இவரது நகைச்சுவையான கவிதைகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.[1] இவரது கவிதைகள் தோ மெய் க்யா கரூன், ராஸ் ரசம்ரித், மாஃப் கிஜியே மற்றும் பாத் பாத் மே பாத் போன்ற பல புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.[2] 2015-ல் பிரபாத் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சந்தோசு மாட்டா எழுதிய பஹுயாமி ஜீவன் கே தானி பி.டி கோபால் பிரசாத் வியாஸ் என்ற சுயசரிதையில் இவரது வாழ்க்கையின் கதை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[3] 1965ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[4]

சுயசரிதை

ஆரம்ப கால வாழ்க்கை

கோபால் பிரசாத் வியாசு, இவரது பள்ளிச் சான்றிதழின் படி, 1915ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தன் நகருக்கு அருகில் உள்ள மகமத்பூரில் பிறந்தார். மதுராவில் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக இவரால் தேர்வுக்குச் செல்ல முடியவில்லை.[5]

திருமணம்

வியாசு இராசத்தான் கரௌலி மாவட்டத்தின் இந்தவுனைச் சேர்ந்த பிரதாப் ஜியின் மகள் அஷர்பி தேவியை மணந்தார்.[5]

தொழில்

வியாசு டைனிக் இந்துஸ்தான், சாகித்ய சந்தேஷ், ராஜஸ்தான் பத்ரிகா, சன்மார்க் ஆகியவற்றில் ஆசிரியராகவும், விகாஷீல் பாரதத்தின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1937 முதல் இறக்கும் வரை வியாசு கட்டுரை எழுதுவதில் தீவிரமாக இருந்தார். தில்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய கவி சம்மேளனத்தின் நிறுவனர் ஆவார்.[5]

இறப்பு

வியாசு 2005-ல் மே 28 சனிக்கிழமை, 2 புது தில்லியில் உள்ள குல்மோகர் பூங்காவில் உள்ள தனது இல்லத்தில் இறந்தார்.[5][6]

குறிப்புகள்

  1. according to "school records", (1914-02-13)13 பெப்ரவரி 1914 according to "family records"

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோபால்_பிரசாத்_வியாசு&oldid=18785" இருந்து மீள்விக்கப்பட்டது