கோபாலா கோபாலா (2015 திரைப்படம்)
கோபாலா கோபாலா | |
---|---|
இயக்கம் | கிஷோர் குமார் பர்தாசனி |
தயாரிப்பு | டக்குபதி சுரேஷ் பாபு சரத் மாரர் |
திரைக்கதை | கிஷோர் குமார் பர்தாசனி பூபதி ராஜா தீபக் ராஜ் |
இசை | அனுப் ரூபன்ஸ் |
நடிப்பு | பவன் கல்யாண் வெங்கடேஷ் சிரேயா சரன் மிதுன் சக்கரவர்த்தி |
ஒளிப்பதிவு | ஜெயனன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | கௌதம் ராஜு |
கலையகம் | சுரேஷ் புரோடக்சன்ஸ் நார்த் ஸ்டார்ட் எண்டர்டெயின்மெண்ட் |
விநியோகம் | புலூ ஸ்கை சினிமாஸ் இன்க். (அமெரிக்க ஐக்கிய நாடு)[1] |
வெளியீடு | 10 சனவரி 2015[2] |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹12 கோடி (120 மில்லியன்)[3] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹88 கோடி (880 மில்லியன்)[4] |
கோபாலா கோபாலா (Gopala Gopala) என்பது 2015 ஆண்டைய இந்திய தெலுங்கு பக்தி அங்கத நாடக திரைப்படமாகும். இப்படத்தை கிஷோர் குமார் பர்தாசனி இயக்கியுள்ளார். இப்படத்தை சுரேஷ் புரொடக்சன்ஸ் மற்றும் நார்த் ஸ்டார்ட் எண்டர்டெயின்மெண்ட் பதாகைகளின் கீழ் டக்குபதி சுரேஷ் பாபு மற்றும் சரத் மாரா ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இதில் பவன் கல்யாண் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர், இவர்களுடன் சிரேயா சரன், மிதுன் சக்கரவர்த்தி , கிருஷ்ண முரளி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜெயனன் வின்சென்ட் திரைப்படத்தின் ஒளிப்பதிவை செய்துள்ளார், அனூப் ரூபென்ஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படமானது 2012 ஆண்டைய இந்தி திரைப்படமான ஓ மை காட் படத்தின் மறு ஆக்கமாகும். இந்த இந்திப்படமானது குசராத் மேடை நாடகமான கஞ்சி விருத் கஞ்சி மற்றும் 2001 திரைப்படமான தி மேன் ஹூ சூட் காட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நிலநடுக்கத்தால் தனது கடையை இழந்து, கடவுள் மீது கோபம் கொண்ட ஒரு நாத்திகரான கோபாலா ராவை பின்தொடரும் கதை இது. மத அமைப்புகள் அவரை கோபால் ராவை எதிர்த்துப் போராட, கிருஷ்ணர் மனித உருவில் அவரை சந்திப்பதாக கதை வளர்கிறது.
கோபாலா கோபாலா ₹120 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டது. படத்தயாரிப்பானது 2014 சூன் 9 அன்று துவங்கியது. படப்பிடிப்பானது விசாகப்பட்டனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில காட்சிகள் ஐதராபாத் மற்றும் வாரணாசியில் படம்பிடிக்கப்பட்டன. இப்படமானது உலக அளவில் 2015 சனவரி 10 அன்று மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியானது. இது விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, ₹660 மில்லியனை வசூலித்தது, இதில் விநியோகஸ்தர்களின் பங்கு ₹411 மில்லியன் ஆகும்.
கதை
கடவுள் சிலைகளையும் பொம்மைகளையும் விற்கும் கடை வைத்துள்ள கோபால ராவ் (வெங்கடேஷ்) ஒரு நாத்திகர். அவரது மனைவி மீனாட்சி (ஸ்ரேயா) கடவுள் பக்தி மிக்கவர். கோபால் ராவின் மூட நம்பிக்கை எதிர்ப்புப் பேச்சும் நடவடிக்கைகளும், மத நிறுவனங்களுக்கு உதவுவதைவிட ஏழைகளுக்கு உதவுங்கள் என்ற அறைகூவலும் கடவுளின் பிரதிநிதியாக அறிவித்துக் கொண்டுள்ள சித்தேஸ்வர மகராஜின் (போசனி கிருஷ்ண முரளி) கோபத்துக்கு ஆளாகிறார்.
ஒரு நாள் புயல் மழை பூகம்பத்தால் கோபால ராவின் கடை இடிந்துபோய் விடுகிறது. இழப்பீடு கேட்டு காப்பீடு நிறுவனத்துக்குப் போகும் கோபால் ராவிடம், கடவுளின் செயலால் ஏற்படும் இழப்புக்கு இழப்பீடு வழங்க இயலாது என்கிறார்கள். அதனால் கோபால் ராவ் கடவுள்மீது வழக்குத் தொடுக்கிறார், அதற்கு வழக்கறிஞர் அக்பர் பாய் ( முரளி சர்மா) உதவுகிறார். வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
கடவுள் மீது வழக்குத் தொடுத்த கோபால் ராவ் மீது லீலாந்த்ர சுவாமி (மிதுன் சக்ரவர்த்தி) ஆதரவாளர்களால் பயங்கர எதிர்பும், அதேசமயம் கடவுளின் செயலால் பாதிப்புக்கு ஆளானவர்களின் ஆதரவும் கிடைக்கிறது.
கோபால் ராவின் வீட்டை ஒரு கந்துவட்டிக் கும்பல் ஆக்கிரமிக்க, அவரின் மனைவி மீனாட்சியும் கோபால் ராவை பிரிந்து செல்கிறார். அந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக கோபால கோவிந்த ஹரி (பவன் கல்யாண்) வந்து கந்துவட்டிக் கும்பலிடம் இருந்து கோபால் ராவின் வீட்டை அவருக்கு மீட்டுக் கொடுத்து, அவருடனே தங்க அனுமதி பெற்கிறார் (இந்த கோவிந்த ஹரி என்பவர் சாட்சாத் கிருஷ்ணனே மானுட உருவில் வந்துள்ளார் என்பது பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகிறது)
கோபால கோவிந்த ஹரியும் கோபால ராவின் வழக்கிற்கு ஆதரவாக பல ஆதாரங்களை விவிலியம், குரான், பகவத் கீதை போன்ற சமய நூல்களில் இருந்து (உலகை படைத்தவர் கடவுள் அவர் உலகை காக்கவும் அழிக்கவும் செய்கிறார் என்பது போன்ற) திரட்டி தருகிறார்.
கடவுள் மீது தொடுக்கப்பட்ட வழக்கையும், கடவுளின் பிரதிநிதிகளாக செயல்படும் லீலாந்த்ர சுவாமி மற்றும் சித்தேஸ்வர மகராஜ் போன்றோரை எதிர்த்தும் கடவுள் கோபால கோவிந்த ஹரியின் உதவியுடன் நாதிதிகர் கோபால் வென்றாரா, அவது மனைவி மீனாட்சியுடன் மீண்டும் சேர்ந்தாரா, என்பதே கதையின் இறுதி.
மேற்கோள்கள்
- ↑ "'Gopala Gopala' in USA by BlueSky". IndiaGlitz. 16 December 2014. Archived from the original on 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 December 2014.
- ↑ H. Hooli, Shekhar (8 January 2015). "'Gopala Gopala' Gets 'U' Certificate from Censor Board; Set to Release on 10 January". International Business Times India. Archived from the original on 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
- ↑ Srikanya (17 July 2014). "Believe? Pawan Kalyan's new film, the budget of 12 crore". Oneindia Entertainment. Archived from the original on 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
- ↑ V. P., Nicy (18 February 2015). "'Gopala Gopala' Box Office Collection: ₹100 Crore Remains a Distant Dream for Pawan Kalyan-Venkatesh Starrer". International Business Times India. Archived from the original on 18 February 2015. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)