கோபாலசிங்கம் சிறிதரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோபாலசிங்கம் சிறிதரன் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். இவர் இலங்கை இனப்பிரச்சினையின் காரணமாக இலங்கை அரசும் ஈழப் போராளிகளும் செய்யும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி, வெளிப்படுத்தி, தடுப்பதில் ஈடுபட்டு இருக்கின்றார்.

விருதுகள்

பன்னாட்டு மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பு உட்பட 11 முக்கிய பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கான 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன இவர் புருண்டியைச் சேர்ந்த மற்றுமொரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்ரான கிளேவர் ம்போனிம்ப்பா, ராஜன் ஹூல் என்பர்களுடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.[1][2]

ஆதாரங்கள்

  1. 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது பற்றிய பிபிசி தமிழ் செய்திகள்
  2. 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது பற்றிய பிபிசி ஆங்கில செய்திகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோபாலசிங்கம்_சிறிதரன்&oldid=28142" இருந்து மீள்விக்கப்பட்டது