கோடேரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோடேரி (Koderi) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரியில் படுகர் இனமக்கள் வாழும் ஓர் ஊராகும். இவ்வூர் குன்னூரிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலும் ஊட்டியிலிருந்து 20 கி மி. தொலைவிலும் அமைந்துள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள நான்கு மலைகளில் ஒரு பகுதி கோடேரி ஊர் எனக் கருதப்படுகிறது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 643213[1]. கோடேரி ஊரும் கூட இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மேல்கோடேரி எனவும் கீழ்கோடேரி எனவும் அம்மக்களால் அழைக்கப்படுகிறது. கொடைப்பாறை என்னும் கோயில் இங்கு ஒரு பிரசித்திப் பெற்ற சுற்றுலாப் பகுதியாகும். இப்பாறை பார்ப்பதற்கு ஒரு குடைபோல் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் தேயிலைத் தொழில் ஆகும். 'கெண்ட அப்ப' என்ற பூக்குண்டம் திருவிழாவை மேல் கோடேரி மக்கள் கொண்டாடுகிறார்கள், இத்திருவிழா நாளில் மக்கள் யங்குரா எனப்படும் புனித பூநூல் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். கீழ்கோடேரி மக்கள் 'மாரி அப்ப என்ற [மாரி அம்மன் திருவிழாவை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடுவர். இதைத் தவிர எத்தே அப்பா என்றொரு பண்டிகையும் இம்மக்களின் முக்கியமான பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கோடேரி&oldid=41792" இருந்து மீள்விக்கப்பட்டது