கொ. மா. கோ. இளங்கோ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கொ. மா. கோ. இளங்கோ
கொ. மா. கோ. இளங்கோ
இயற்பெயர்/
அறியும் பெயர்
கொ. மா. கோ. இளங்கோ
பிறந்ததிகதி (1972-10-24)24 அக்டோபர் 1972
பிறந்தஇடம் ராஜபாளையம்
பெற்றோர் கொ. மா. கோதண்டம்
ராஜேஸ்வரி

கொ.மா.கோ.இளங்கோ (பிறப்பு: அக்டோபர் 24, 1972) தமிழக சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார்.

கொ.மா.கோ.இளங்கோ,சிறுவர்களுக்காக பல நூல்களை எழுதியுள்ளார். இவரது 'ஜிமாவின் கைபேசி' சிறுவர் அறிவியல் புனைகதை நூலுக்கு த.மு.எ.க.ச விருதும், திருப்பூர் இலக்கிய விருதும் பெற்றவர். 'எட்டுக்கால் குதிரை' சிறுவர் நாவலுக்கு த.க.இ.பெருமன்ற விருது பெற்றவர். இயந்திரவியலில் இளநிலையும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சிமெண்ட் ஆலை கட்டுமானத்துறை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

ஜெர்மன் நாட்டைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கி வரும் ‘அனைத்துலகத் தமிழ்க் கல்வி பண்பாடு அறிவியல் மேம்பாட்டு இணையம்’ உருக்கியுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் கீழ், ஐந்தாம் வளர்நிலைத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் ‘செட்டை கிழிந்த வண்ணத்துப்பூச்சி’ என்ற இவரது சிறுவர்கதையும், 6ம் நிலை தமிழ்ப் பாடத்தில் ‘உப்பளத்துக்கு வந்த வெள்ளையானை’ எனும் சிறுவர் கதையும், 7ம் வளர்நிலைப் பாடத்தில் ‘கதிரவனை ஒளித்த சிறுமி எனும் சிறுவர் கதையும் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் 11 நாடுகளைச் சேர்ந்த 36,000 பள்ளி மாணவர்கள் பயன் பெறுவர்.

பட்டங்களும் விருதுகளும்

  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் - கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது - சிறந்த குழந்தை இலக்கிய நூல் - ஜிமாவின் கைபேசி (2014)
  • இராஜபாளையம் மணிமேகலை மன்றம் – சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்பாளி -2015: ஐஸ்வர்யா இலக்கிய விருது
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – தவத்திரு. குன்றக்குடி அடிகளார் நினைவு விருது - 'எட்டுக்கால் குதிரை' (2014)
  • திருப்பூர் இலக்கிய விருது -2016, சிறந்த சிறுவர் இலக்கிய நூல் - ‘ஜிமாவின் கைபேசி’
  • திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது- 2015 சிறந்த சிறுவர் இலக்கியப் புத்தகம் – 'மக்கு மாமரம்'
  • நெய்வேலி புத்தகக் கண்காட்சி (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) - 'சிறந்த எழுத்தாளர் விருது -2017'
  • வாசகசாலை இலக்கிய அமைப்பின் ‘தமிழ் இலக்கிய விருதுகள்’-2020- சிறந்த சிறுவர் இலக்கியம் – சூரியனை ஒளித்து வைத்த சிறுமி
  • பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, கம்பம் - தமிழ் இலக்கிய விருதுகள்- 2020- சிறந்த சிறுவர் இலக்கியம் –முதல் பரிசு- சூரியனை ஒளித்து வைத்த சிறுமி
  • தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) - (The Bookseller`s and Publishers` Association of South India(BAPASI)நடத்திய 44வது சென்னை புத்தகக் காட்சி- சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளருக்கான 'குழந்தைக் கவிஞர்' அழ.வள்ளியப்பா விருது- 2021

சிறுவர் நூல்கள்

  • அலைகளின் அம்மா யாரு? (சிறுவர் கதைகள்- வானம் பதிப்பகம்)
  • மலைபூதம் வாய்பிளந்த மர்மம் (சிறுவர் கதைகள் - புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • பச்சை வைரம் (சிறுவர் நாவல்- புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • சூரியனை ஒளித்து வைத்த சிறுமி (சிறுவர் கதைகள்- புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • நட்சத்திரக் கண்கள் (சிறுவர் கதைகள்-புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • சஞ்சீவி மாமா (சிறுவர் நாவல்- புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • மந்திரக் கைக்குட்டை (சிறுவர் கதைகள்- புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • பஷிராவின் புறாக்கள் (சிறுவர் நாவல்- புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • பிரியமுடன் பிக்காஸோ (சிறுவர் நாவல்- என்.சி.பி.ஹெச் வெளியிடு)
  • ஓநாய் கண்டறிந்த உண்மை (சிறுவர் கதைகள்- புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • ஜிமாவின் கைபேசி (சிறுவர் அறிவியல் புனைகதை- புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • எட்டுக்கால் குதிரை (சிறுவர் நாவல்- புக்ஸ் ஃபார் சில்ரன்)
  • குட்டி டாக்டர் வினோத் (சிறுவர் கதைகள்- ராஜேஸ்வரி புத்தக நிலையம்)
  • ஆயிரங்கால் பூச்சி (சிறுவர் கதைகள்- பாலா பதிப்பகம்)
  • தேனென இனிக்கும் தீஞ்சுவை கதைகள் (சிறுவர் கதைகள்- பிரபாத் புக் ஹவுஸ்)

சிறார் மொழிபெயர்ப்பு நூல்கள்

  • பெட்டுனியா - உலகச் சிறார் கதைகள் - புக்ஸ் ஃபார் சில்ரன்
  • மாயி-சான் (ஹிரோசிமாவின் வானம்பாடி) சப்பானிய சிறுவர் நாவல்- தோசி மாருகி-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • ராஜா வளர்த்த ராஜாளி- லியோ டால்ஸ்டாய் சிறுவர் கதைகள்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • சிறகடிக்க ஆசை-தெலுங்கில் பால சாகித்ய விருது பெற்ற சிறுவர் கதைகள்–டி.சுஜாதா தேவி-சாகித்ய அகாடெமி வெளியிடு
  • ரெட் பலூன் -சிறுவர் நாவல் –ஆல்பெர்ட் லாமொரிஸ்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் –லியோ டால்ஸ்டாய்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • அன்பின் பிணைப்பு -புஷ்பா சக்சேனா -நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT
  • தேனீக்களின் விந்தை உலகம் -எஸ்.ஐ.பரூக் -நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT
  • மக்கு மாமரம் -ஆ.நா.பெட்னேகர்-நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT
  • விடுமுறை வந்தாச்சு - ரவீந்திரநாத் தாகூர்-நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT
  • மறக்கமுடியாத விலங்குகள் – ரஷ்கின் பாண்டே-நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT
  • சிவப்புக்கொண்டை சேவல் -உருசிய சிறுவர் கதை –க.ஓவ்சீனிக்கவ்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • வேட்டைக்காரன் மெர்கேன் -உருசிய சிறுவர் கதை –கென்னடி பாவ்லிஷின்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • குறும்புக்கார கன்றுக்குட்டி-உக்ரேன் நாட்டுக் கதை-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • மாஷாவின் மாயக்கட்டில் -உருசிய சிறுவர் கதை –கலினா லெபெதெவா-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • தீப்பறவை -உருசிய நாடேடிக் கதை-வானம் பதிப்பகம்
  • அழகிய பூனை-வண்ட கக் -புக்ஸ் ஃபார் சில்ரன்
  • பெர்டினன்-மன்ரோ லீப்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • குட்டன் ஆடு-மன்ரோ லீப்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • குட்டித் தாத்தா-நடாலே நோர்டன் -புக்ஸ் ஃபார் சில்ரன்
  • குஞ்சுவாத்து பிங் –மார்ஜோரி பிளேக், கர்ட் வீஸ் -புக்ஸ் ஃபார் சில்ரன்
  • தப்பியோடிய குட்டிமுயல்-மார்கரெட் வைஸ் பிரவுன்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • மந்திர விதைகள்-மித்சுமாசா அனோ-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • உயிர் தரும் மரம்–ஷெல் சில்வர்ஸ்டீன்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • ஸ்னிப்பியும் ஸ்னப்பியும்–வண்ட கக்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • எலி எப்படிப் புலியாச்சு?–மர்சியா பிரெள்ன்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • ராஜாவின் காலடி–ரோல்ப் மில்லர்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • அரோடின் ஊதாக்கலர் கிரேயான்–கிரோகட் ஜான்சன்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • கடைசிப் பூ–ஜேம்ஸ் தர்பெர்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • ஆப்பிள் ஜானி-அலிகி-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி–எலிசா க்லேவன்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • வீ கில்லிஸ்– மன்ரோ லீப்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • அன்புக்குரிய யானைகள்–யுகியோ சுசியா-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • ஆர்தரின் சூரியன்–ஹட்ஜாக் குல்னஷரியன்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • காக்கை சிறுவன்–டாரோ யஷிமா-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • குட்டியூண்டு முயல்– ராபர்ட் கிராஸ்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • நீங்க என்னோட அம்மாவா?–பி.டி.ஈஸ்ட்மேன்-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • சக்கர நாற்காலிக் கால்கள்–பிரன்ஸ் ஜோசப் குயை-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • சாலுவின் ப்ளூபெர்ரி–ராபர்ட் மெக்லோஸ்கே-புக்ஸ் ஃபார் சில்ரன்
  • வில்லி எலி–அல்டா தபோர்-புக்ஸ் ஃபார் சில்ரன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கொ._மா._கோ._இளங்கோ&oldid=3931" இருந்து மீள்விக்கப்பட்டது