கொரியாவில் சமயம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயூன்யின்னில் உள்ள புத்தர் சிலை, The passing of Korea (1906) by the American Protestant missionary Homer Bezaleel Hulbert.

கொரியாவில் சமயம் (Religion in Korea) பல்வேறுபட்ட மரபுகளை உள்ளடக்குகிறது. கொரியாவின் அல்லது கொரிய மக்களின் உள்நாட்டுச் சமயம் கொரியச் சாமனியம் எனும் வெறியாட்டச் சடங்குகள் ஆகும். கொரிய வரலாற்றில் பழைய நூற்றாண்டுகளில் புத்தமதம் ஓங்கியிருந்த்து. எனினும் இது யோசியோன் பேரரசில் பெரிதும் ஒடுக்கப்பட்டது. இக்காலத்தில் கொரியக் கன்பியூசனியம்அரசு சமயமாக ஆதரிக்கப்பட்டது.[1] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிவாளிகளால் யோசியோன் ஆட்சியின் இறுதிப் பத்தாண்டுகளில் கிறித்துவம் பரப்பப்பட்டது. அப்போது கன்பியூசனியச் சமூகம் வேகமாக குலையலானது.[2]

1945 ஆம் ஆண்டின் கொரியப் பிரிவினைக்குப் பின் வடகொரியாவிலும் தென்கொரியாவிலும் சமய வாழ்க்கை அரசியல் சிந்தனைக் கட்டமைப்புகளால் பெரிதும் வேறுபடலானது:

  • தென்கொரியாவில் சமயம் கிறித்துவ, புத்தமத எழுச்சியைக் கண்டது. பல பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்ட கொரியச் சாமனியமும் மீளெழுச்சி கண்டது. இப்போது சாமனியர்கள் தம் வெறியாட்டச் சடங்குகளைத் தொடர்கின்றனர்.
  • வடகொரியாவில் சமயம்அரசின் இறைமறுப்புக் கோட்பாட்டால் பொது இடங்களில் சமய நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. அதே வேளையில் சியோந்தோயியம் எனும் கொரிய அகச் சமயம் அரசால் ஆதரிக்கப்படுகிறது[3] and is allowing a small revival for Buddhism to occur[4]

மேலும் காண்க

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

தென்கொரியாவில் சமயம் வடகொரியாவில் சமயம்

மேற்கோள்கள்

  1. Grayson, 2002. pp. 120-138
  2. Grayson, 2002. pp. 155-158
  3. Lee, 1996. p. 110
  4. http://english.hani.co.kr/arti/english_edition/e_northkorea/555811.html

தகவல் வாயில்கள்

  • James H. Grayson. Korea - A Religious History. Routledge, 2002. ISBN 070071605X
  • Sang Taek Lee. Religion and Social Formation in Korea: Minjung and Millenarianism. Walter de Gruyter & Co, 1996. ISBN 3110147971
"https://tamilar.wiki/index.php?title=கொரியாவில்_சமயம்&oldid=20071" இருந்து மீள்விக்கப்பட்டது