கொண்டல் சு. மகாதேவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கொண்டல் சு. மகாதேவன் (பிறப்பு: சூலை 1, 1925 இறப்பு: சனவரி 1, 2012 [1] ) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம், கொண்டல் வட்டம் திடல், எனும் ஊரில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் அரசு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகவும் முதல்வராகவும் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகவும் பணியாற்றியவர். சாகித்யா அகாதெமியில் உறுப்பினராக இருந்தவர்.[1] முதியோர் கல்வி, குழந்தைகளுக்கான இலக்கியம், அறிவியல் நூல்கள், ஆய்வு நூல்கள், நாடகம், மொழிபெயர்ப்பு நூல்கள் எனும் வகையில் பல்வேறு நூல்களை எழுதியவர். தமிழ் வளர்ச்சித் தொடர்பில் மொரிசியசு, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்றவர். இவர் எழுதிய "தமிழன் அறிவியல் முன்னோடி" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

பணி

கொண்டல் சு. மகாதேவன் ஆற்றிய பணிகள்:-

  • ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி
  • பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
  • முதல்வர், அரசுக்கலைக்கல்லூரி, சென்னை.[1]
  • இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை. (11.5.1972 முதல் 10.2.1982 வரை) .[2]
  • உறுப்பினர், சாகித்ய அகாதெமி [1]

நூல்கள்

  1. நட்சத்திரங்களின் கதை, 1975, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

மாணவர்கள்

இவரிடம் பயின்று பின்னாளில் புகழ்பெற்ற மாணவர்கள்

  1. சாலை இளந்திரையன், தமிழ்ப்பேராசிரியர்
  2. சாலினி இளந்திரையன், தமிழ்ப்பேராசிரியர்
  3. மா. செங்குட்டுவன், கவிக்கொண்டல் இதழாசிரியர்

சான்றடைவு

"https://tamilar.wiki/index.php?title=கொண்டல்_சு._மகாதேவன்&oldid=3938" இருந்து மீள்விக்கப்பட்டது