கொஞ்சும் சலங்கை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கொஞ்சும் சலங்கை
இயக்கம்எம். வி. ராமன்
தயாரிப்புஎம். வி. ராமன்
ராமன் புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுநவம்பர் 14, 1962
நீளம்3287 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கொஞ்சும் சலங்கை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்

எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பெரும்பாலும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டிருந்தன. எஸ். ஜானகி பாடிய சிங்கார வேலனே தேவா என்ற பாடல் மிகப் புகழ் பெற்றது. இப்பாடலுக்கு நாதஸ்வர இசை துணை இசையாகக் கையாளப்பட்டிருந்தது. காருக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வர இசை வழங்கியிருந்தார். பாடல் பம்பாயிலும், நாதஸ்வர இசை சென்னையிலும் பதிவாகி, பின் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்தப் பாடல் ஆபேரி ராகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பாடலை கு. மா. பாலசுப்பிரமணியம் இயற்றியிருந்தார்.

ஒருமையுடன் என்று தொடங்கும் வள்ளலார் பாடல் பிலஹரி ராகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

ராகமாலிகையாக உருவாக்கப்பட்டிருந்த காண கண் கோடி வேண்டும் என்ற வி. சீதாராமன் இயற்றிய பாடலுக்கு குமாரி கமலா நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் காட்சி சிதம்பரம், ஸ்ரீரங்கம், மதுரை, திருச்செந்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தலங்களில் படமாக்கப்பட்டிருந்தது. படம் வெளிவர முன்னர் வெளியிடப்பட்ட இசைத்தட்டில் ஸ்வரங்களுடன் சேர்த்து பாடல் முழுமையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பாடலின் கால அளவு 6:14 நிமிடங்களாக இருந்தது. ஆனால் படத்தில் ஸ்வரங்கள் பகுதிகளை நீக்கிவிட்டார்கள். ஆகவே படத்தில் பாடலின் கால அளவு 5:22 நிமிடங்களாக மட்டுமே இருந்தது. முழுமையான பாடலுக்கான இணைப்பு வெளி இணைப்புகள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • ராண்டார் கை (23 மே 2015). "Konjum Salangai 1962". தி இந்து. Archived from the original on 23 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 23 ஜனவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கொஞ்சும்_சலங்கை&oldid=32579" இருந்து மீள்விக்கப்பட்டது