கைசிகப் புராண உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கைசிகப் புராண உரை கன்னும் நூல் வைணவ இலக்கிய ஆசிரியர் பட்டர் என்பவரால் செய்யப்பட்டது. இதன் காலம் 12-ஆம் நூற்றாண்டு.

கைசிகம் என்பது ஒருவகைப் பண். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி என்னும் ஊரில் வாழ்ந்த பாணர் குல திலகம் நம்பாடுவார் அவ்வூர் நம்பி (திருமால்) கோயிலில் வழக்கமாக யாழிசை கூட்டிப் பண் பாடிவந்தான். ஒரு நாள் அவன் கைசிகப் பண்ணைப் பாடினான். அந்தப் பாட்டின் பலத்தால் அவன் 'பிரமராக்கதன் தேவன்' நிலை எய்தினான். [1][2]

வடமொழி வராக புராணத்தில் இந்தச் செய்தியைச் சொல்லும் பகுதி 92 சுலோகங்கள் கொண்டது. இதனைப் பட்டர் தமிழில் உரையாக எழுதியுள்ளார்.

இவர் உரையில் ஒரு பகுதி

"தமக்குப் பாடுவான் பெறும் பேறு சொல்லுகிறோம்; யாவனொருவன் கார்த்திகை மாசத்துச் சுக்லபக்ஷ த்வாதசி யன்றைய தினம் நம்முடைய சந்நதி முன்பே வந்து இந்தக் கைசிக பெருமையை வாசிக்கிறான், யாவனொருவன் கேட்கிறான், அவர்களும் 'சூழ்ந்திருந்து ஏத்துவார் பல்லாண்டே' என்றும் சொல்லுகிறபடியே நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபவம் பண்ணிக்கொண்டிருப்பார்கள் காணும் - என்று நாச்சியாரைப் பார்த்துப் பெருமாள் அருளிச்செய்தார். இப்படி அருளிச்செய்த வார்த்தை கேட்டு நாச்சியாரும் பயணத்தால் உண்டான இளைப்பெல்லாம் தீர்த்து இக்கரண ரூபமாய் இருப்பதொரு உபாய வைபவமிருந்தபடியென் - என்று க்ருதார்த்தையானாள்."

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கைசிகப்_புராண_உரை&oldid=17207" இருந்து மீள்விக்கப்பட்டது