கே. மலைச்சாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கே. மலைச்சாமி என்பவர் ஓர் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் தமிழகத்தின் உள்துறைச் செயலர், மாநில தேர்தல் ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அதிமுகவில் இணைந்தார். 1999ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் பவானி ராஜேந்திரனைவிட சுமார் ஆறாயிரத்து அறுநூறு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். பிறகு, 2004ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு உறுப்பினராகவும் இருந்தார்.[1] இவர் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 15 ம் தேதி அதிமுகவிலிருந்து அதன் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்.[2]

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=கே._மலைச்சாமி&oldid=27369" இருந்து மீள்விக்கப்பட்டது