கே. நல்லதம்பி (எழுத்தாளர்)
கே. நல்லதம்பி (பிறப்பு: 29 நவம்பர் 1949) என்பவர் இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வரும் இவர், கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் பல புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார்.[1] நேமிசந்த்ரா எழுதிய ‘யாத்வஷேம்’, விவேக் ஷான்பாகின் ‘காச்சர் கோச்சர்’, சாகித்திய அகாதமிக்காக ஸ்ரீநிவாச வைத்யா எழுதிய ‘ஓடை’ போன்ற பல சிறந்த படைப்புகளை தமிழாக்கம் செய்துள்ளார். இவருடைய சிறுகதைகளும் கவனம் பெற்றவை. ‘அத்தர்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. சாகித்ய அகாதமி 2022 மொழிபெயற்புக்கான விருது, குவெம்பு பாஷா விருது, ஸ்பாரோ இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை மொழிபெயர்ப்புக்காகப் பெற்றுள்ளார். இதுவரை சுமார் ஐம்பதுக்கும் அதிகமான புத்தகங்கள் இவரது ஆக்கத்தில் கன்னடம், தமிழ் இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளன.
கன்னடத்திலிருந்து யாத்வஷேம் என்ற புதினத்தை அதேபெயரில் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது கே. நல்லதம்பிக்கு வழங்கப்பட்டது.[2] இது மிகப் பரவலாக வாசிக்கப்பட்ட நூல். பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பல வாசகர்கள் வாங்கி அநேகம் பேருக்கு பரிசளித்த நூல்.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டம், அழகாபுரியைச் சேர்ந்த இவரின் தாத்தா தன் பிள்ளைகளுடன் மைசூருக்குப் புலம்பெயர்ந்தார். நல்லதம்பி 1949-இல் மைசூரிலேயே பிறந்து வளர்ந்தார். மைசூரில் தமிழ் வழியில் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் கன்னட வழியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அப்பகுதி பெரியவர்கள் தங்கள் தாய்மொழியை பிள்ளைகளுக்கு கற்பிக்கவேண்டி கும்பகோணத்தில் இருந்து தமிழாசிரியரை அழைத்து வந்திருந்தனர். அந்த ஆசிரியரின் உதவியுடன் வீட்டிலேயே தமிழ் எழுத படிக்க கற்றுக்கொண்டார். இலக்கிய ஆர்வத்தினால் இளம் வயதிலேயே தமிழ், கன்னட நூல்களை தொடர்ச்சியாக வாசித்துவந்தார். கல்லூரியில் இளங்கலை வரை பயின்ற பின்னர் ரெஸ்டோலெக்ஸ் காயர் பிராடகட்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்தில் வணிகப் பிரிவின் அகில இந்திய மேலாளராக 35 வருடங்கள் வேலை பார்த்து, ஓய்வுபெற்றார். இவர் ஒளிப்படக் கலையிலும் ஆர்வமிக்கவராகவர். பல உலக, தேசியக் கண்காட்சிகளில் இவரது ஒளிப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பல பரிசுகளும் பெற்றிருக்கின்றன. இந்திய லலித கலா அகாதெமியில் இவரது 6 ஒளிப்படங்கள் நிரந்தர அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச புகைப்படக் கலைஞர் சங்கத்தின் தலைவராக 1991-92களில் இருந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தீவிரமாக இலக்கியப் பணியில் ஈடுபட துவங்கினார். கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்த்து எழுதிய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பல கன்னட, தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.[3]
குவெம்பு பாஷா பாரதி வெளியீடுகளான தெங்கனமஹிளா லேககரு (2016) தொகுப்புகளில் தமிழ் கட்டுரைகள் கன்னடத்தில் மொழிபெயர்த்து வந்துள்ளன. சங்கக் கவிதைகள் சிலவற்றை கன்னட எழுத்தாளர் திருமதி. லலிதா சித்தபசவய்யாவுடன் இணைந்து மொழிபெயர்த்திருக்கிறார். அவை ‘நிச்சம் பொசது’ (2016) என்ற தொகுப்பாக வந்துள்ளது.பெரியார் விசாரகளு (2017) என்ற பெரியாரின் சிந்தனைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளிவந்துள்ளது.
தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.
இவருடைய படைப்புகள்
கன்னடத்திலிருந்து தமிழில்
- மொட்டு விரியும் சத்தம் - லங்கேஷ் அவர்களின் ‘நீலு கவன’ (கவிதைத் தொகுப்பு) (2013) விழிகள் பதிப்பகம்.
- கடுகு வாங்கி வந்தவள் - பாரதி பி.வி. (அனுபவக் கதை) (2015) என்.சி.பி.எச். (இரண்டாவது பதிப்பு-2023)
- வாக்கியம், உயிர் மெய்யெழுத்து, இலக்கணம் (சில கன்னட எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) (2018) எதிர் வெளியீடு.
- ஓடை (கன்னட நாவல், ‘ஹள்ள பந்து ஹள்ள’) - ஸ்ரீனிவாச வைத்யா. (2018) சாகித்ய அகாடெமி வெளியீடு.
- காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக் (புதினம்) (2017) காலச்சுவடு பதிப்பகம். நான்கு பதிப்புக்கள் 2019, 2020, 2022.
- அம்ரிதா நினைவுகள் - ரேணுகா நிடுகுந்தி. (2019) பாதரசம் பதிப்பகம்.
- மோகனசாமி (சிறுகதைத் தொகுப்பு) வசுதேந்த்ரா (2019) வெஸ்ட் லேண்ட் பப்ளிகேஷன்.& காலச்சுவடு பதிப்பகம் (இரண்டாவது பதிப்பு -2023)
- மகிழம் பூ மணம் (சிறுகதைத் தொகுப்பு) ஜயந்த் காய்கிணி (2019) காலச்சுவடு பதிப்பகம்.
- இதிகாசம் (சிறுகதைத் தொகுப்பு) எஸ். திவாகர் (2019)காலச்சுவடு பதிப்பகம்.
- யாத்வஷேம் (புதினம்) நேமிச்சந்த்ரா (2020) எதிர் வெளியீடு. (இரண்டாவது பதிப்பு -2023)
- உண்மை இராமாயணத்தின் தேடல் - ஜி.என்.நாகராஜ் (கட்டுரைகள்) (2020) எதிர் வெளியீடு.
- மயில் புராணம் - கே.ஈ.இராதாகிருஷ்ணன் - பாகிஸ்தான் எழுத்தாளர் இந்தஜார் ஹுசைன் சிறு கதைகள் (2020) எதிர் வெளியீடு
- வாட்டர் மெலன் - பி. கனகராஜ் (சிறுகதைகள்) (2020) யாவரும் பதிப்பகம்.
- ஹயவதனா - கிரிஷ் கார்னாட் - (நாடகம்) (2020) சந்தியா பதிப்பகம்.
- யசோதரை உறங்கவில்லை - எம். எஸ். மூர்த்தி (நாடகம்) (2021) பூமி பதிப்பகம்.
- கேலிச்சித்திர வரலாறு - ஜே. பாலகிருஷ்ண -(கட்டுரைத் தொகுப்பு) (2022) எதிர் வெளியீடு.
- காஞ்சன சீதை - கிருஷ்ணமூர்த்தி சந்தர் - (புதினம்) (2022) வாசகசாலை பதிப்பகம்.
- கப்பரை - எம்.எஸ்.மூர்த்தி, (புதினம்)ஜெய்ரிகி பதிப்பகம். (2022)
- ரூபிக் கியூப்ஸ் - பேலூர் இரகுநந்தன், ஜெய்ரிகி பதிப்பகம் (2022)
- புதுவை என்னும் புத்துணர்வு - சந்தியா ராணி. (பயணக்கட்டுரை) அகநாழிகை வெளியீடு.(2022)
- பழங்குடி துணை வேந்தரின் போராட்டங்கள் - தேஜஸ்வி கட்டிமணி - (தன் வரலாறு)அகநாழிகை வெளியீடு (2022)
- சகீனாவின் முத்தம் - விவேக் ஷான்பாக் - (புதினம்) காலச்சுவடு பதிப்பகம் (2022)
- LTTE மூர்த்தி அழைக்கிறார்... - ஷிவகுமார் மாவலி - * அனுபவக்கதை) சாவண்ணா பதிப்பகம் (2022)
- நான் கஸ்தூர்... - டாக்டர் எச். எஸ். அனுபமா - (புதினம்) டிஸ்கவரி பப்ளிகேஷன் (2023)
- அன்புடன் ரமேஷ் - ரமேஷ் அரவிந்த் - சாவண்ணா பதிப்பகம், (ஊக்க நூல்) பெங்களூர் & அகநாழிகை பதிப்பகம், சென்னை(2024)
- சாவு - ஜோகி - சாவண்ணா பதிப்பகம், (கட்டுரைத் தொகுப்பு) பெங்களூர் & அகநாழிகை பதிப்பகம், சென்னை(2024)
- எனக்குள் இருக்கும் கவிதை கியூபா - ஜி,என். மோகன் - (பயணக்கட்டுரை) அகநாழிகை பதிப்பகம் (2024)
- அனைவருக்குமான அம்பேத்கர் - ஜி. பி. ஹரீஷ் - (கட்டுரைத் தொகுப்பு) அகநாழிகை பதிப்பகம் (2024)
- ஒளிச்சேர்க்கை - உமாராவ் - (வாழ்க்கை வரலாறு) எதிர் வெளியீடு - (2024)
- என் மகன் குருதத் - வாசந்தி படுகோனே - (வாழ்க்கை வரலாறு) எதிர் வெளியீடு - (2024)
- கிரிஷ் கார்னாட் ,எம். எஸ். மூர்த்தி (நாடகங்கள்) - எழுச்சி (ஸீரோ டிகிரி பதிப்பகம்) (2024)
- வம்ச விருட்சம் -எஸ். எல். பைரப்பா - (புதினம்) எழுச்சி பிரசுரம் (ஸீரோ டிகிரி பதிப்பகம் - (2024)
தமிழிலிருந்து கன்னடத்தில்
- மாதொரு பாகன் - பெருமாள் முருகன் - அர்தநாரீஷ்வரா (புதினம்) (2016) லங்கேஷ் பிரகாஷனா.
- தமிழ் பத்துக் கதைகள் - (சில தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) (2016) தமிளு ஹத்து கதெகளு - லங்கேஷ் பிரகாஷனா.
- தெங்கனமஹிளா லேககரு- (கட்டுரைத் தொகுப்பு) குவெம்பு பாஷா பாரதி (2016)
- ‘நிச்சம் பொசது’ - (கட்டுரைத் தொகுப்பு) குவெம்பு பாஷா பாரதி (2016
- பெரியார் விசாரகளு - (கட்டுரைத் தொகுப்பு) குவெம்பு பாஷா பாரதி (2017)
- பூக்குழி - பெருமாள் முருகன் (புதினம்) (2017) ஹூ கொண்டா - லங்கேஷ் பிரகாஷனா.
- ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி (புதினம்) (2017) ஹுனசே மரத கதே - லங்கேஷ் பிரகாஷனா.
- பூனாச்சி - பெருமாள் முருகன் (புதினம்) (2019) பூனாச்சி - வெஸ்ட் லேண்ட் பப்ளிகேஷன்.
- பேலியோ டயட் - நியாண்டர் செல்வன் (கட்டுரைத் தொகுப்பு) (2019) - பேலியோ புக் பப்ளிகேஷன்.
- இடபம் - கண்மணி (புதினம்) (2020) கூளி - தேசி பிரகாஷனா.
- கரடத சுப்பம்மா (குழந்தை இலக்கியம்) சாலை செல்வம் -(2021) பிரதம் புக்ஸ்
- மத்தொன்து ராத்ரி (2022) (காந்தி பற்றிய சிறுகதைத் தொகுப்பு) அபிருசி பிரகாஷனா.
- சத்தியத்தின் ஆட்சி - பாவண்ணன் - (கட்டுரைத் தொகுப்பு) பாபு ஹெஜ்ஜெகளல்லி (2022) பல்லவ பிரகாஷனா.
- குடி கண்டே - தி.ஜானகிராமன் (சிறுகதைகள்) (2022) - லடாயி பிரகாஷனா.
- கன்னட சினிமா -ஹொச அலே - (கட்டுரைத் தொகுப்பு) விட்டல் ராவ். (2022) - குவெம்பு பாஷா பாரதி பிரதிகாரா
- தனுர் உத்சவா - டாக்டர் சசித்ரா தாமோதரன் (ஆன்மீக நூல்) (2022) - குவெம்பு பாஷா பாரதி பிரதிகாரா
- சரசவாணிய கிளிகளு - (சில தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) (2023)- பஞ்சமி மீடியா பப்ளிகேஷன்
- ஆஹார சரிதே - முகில் - (கட்டுரைத் தொகுப்பு) (2023) பஞ்சமி மீடியா பப்ளிகேஷன்
சொந்தப் படைப்புகள்
- கன்னடத்தில் கோஷி’ஸ் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு) (2018) பஹுரூபி.
- அத்தர் (சிறுகதைத் தொகுப்பு- தமிழ் ) (2022) எதிர் வெளியீடு.
- அத்தர் (சிறுகதைத் தொகுப்பு- கன்னடம்) (2022) பஞ்சமுகி பிரகாஷனா
- அத்தார் (சிறுகதைத் தொகுப்பு -தெலுங்கு- மொழிபெயர்ப்பு-ரமேஷ் சந்தவர்கலா) 2023 - சாயா பதிப்பகம், ஹைதராபாத்
விருதுகள்
- நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் - ஒரு புளிய மரத்தின் கதை (2018)
- திருப்பூர் இலக்கிய விருது - மொழியாக்க விருது (2019)
- ஸ்பாரோ இலக்கிய விருது (2020)
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் -யாத்வஷேம் மொழிபெயர்ப்புப் புதினத்திற்கான விருது (2021)
- விஜயா பதிப்பகம் - மொழியாக்க விருது (2022) (கே.எஸ்.சுப்ரமணியன் நினைவு)
- குவெம்பு பாஷா பாரதி பிராதிகாரா (2022) கர்நாடகா - ‘கௌரவ விருது’
- குப்பம் திராவிட பல்கலைக்கழகம் மற்றும் திராவிட பாஷா மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் - Award of Recognition (2022)
- கன்னடத்திலிருந்து யாத்வஷேம் என்ற புதினத்தை தமிழில் மொழி பெயர்த்தற்காக, சிறந்த மொழிபெயர்பாளருக்கான கேந்திர சாகித்திய அகாதமி விருது, (2022)
- பெங்களூர் பத்திரிகையாளர்கள் சங்கம் - கருநாடக ஆளுமை விருது - (2023)
சிறப்புக்கள்
- 'சரசவாணியின் கிளிகள்' என்ற SMA ராம் அவர்களின் தமிழ் சிறுகதை கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது. அந்தக் கதை பெங்களூர் பல்கலைக்கழக பி. காம் இரண்டாம் செமிஸ்டர் (2022) பாடமாக வைக்கபட்டுள்ளது.
- 'காச்சர் கோச்சர்' -கன்னடத்தில் விவேக் ஷான்பாக் எழுதிய புதினம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 'தமிழ் பல்கலைக்கழக்கம், தஞ்சாவூர்' மொழிபெயர்ப்புத் துறை- முதுகலை மொழிபெயர்ப்பு (2022) பாடநூலக வைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "கே.நல்லதம்பிக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
- ↑ ""யாத்வஷேம்" "காலா பாணி" நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் - முழு தகவல்கள்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
- ↑ "வீட்டிலேயே தமிழ் கற்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்: தமிழ் - கன்னடத்துக்கு பாலமாக செயல்படும் நல்லதம்பி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.