கே. கே. எஸ். எம். தெகலான் பாகவி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேக் முகம்மது தெகலான் பாகவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிருநெல்வேலி, ஏர்வாடி
தேசியம்இந்தியா
வாழிடம்சென்னை
முன்னாள் கல்லூரிபாக்கியத் சாலிகத் அரபு கல்லூரி (Baqiyat Salihat Arabic College)

சேக் முகம்மது தெகலான் பாகவி (Sheik Mohamed Dhehlan Baqavi) ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் மார்க்க அறிஞர் ஆவார். இவர் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார். மேலும் இவர் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) என்ற அரசியல் கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் உள்ளார்.[1][2][3] இவர் 2009 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவராக இருந்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

இவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் 1971 ஆம் ஆண்டு பிறந்தார்[4]. இவர் ஆரம்பகால படிப்பை கன்னியாகுமரி தக்கலையில் படித்தார். பின்பு 1986 முதல் 1996 வரையில் வேலூர் மாவட்டத்தில் பாக்கியத் சாலிகத் அரபு கல்லூரியில் பட்டம் பெற்றார்.[4] கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் மத்திய சென்னையில் போட்டியிட்டு 23,741 வாக்குகள் பெற்றார்.[5]

மேற்கோள்கள்