கே. என். எழுத்தச்சன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கே.என். எழுத்தச்சன் (K.N. Ezhuthachan, 21 மே, 1911-28 அக்டோபர், 1981) இந்திய எழுத்தாளரும், மலையாள இலக்கியவாதியும் ஆவார். இவர் தமது சமசுகிருதக் கவிதை நூலான 'கேரளயுதயம்'க்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்[1]. 1981-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது மரணித்தார்[2].

இளமைப் பருவம்

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் செர்புலச்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வித்வான் தேர்வினை முடித்தபிறகு ஆசிரியப் பணியைத் தொடங்கினார். சிறிதுகாலம் மும்பையில் எழுத்தராகவும் சுருக்கெழுத்தராகவும் பணியாற்றினார். பின்னர் மலையாளம், சமசுகிருதம் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1953 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டு அங்கேயே முனைவர் பட்ட ஆய்வும் செய்தார். முனைவர் பட்டம் பெற்றபிறகு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் விரியுரையாளராகப் பணியில் சேர்ந்தார். மேலும், இவர் கேரள மாநில மொழிகள் மையத்தில் மூத்த ஆய்வு அதிகாரியாகவும், திராவிட மொழியியல் மையத்தில் ஆய்வாளராகவும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்[3][4].

இலக்கியப் பணி

இவர் மலையாளத்தில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் மலையாள இலக்கணத் தொகுப்பான மலையாள இலக்கணக் கருத்தியல் வரலாறு என்ற நூலை வெளியிட்டுள்ளார்[5].

எழுதிய நூல்கள்

சிறுகதைகள்

  • கதமாலிகா
  • கதபூசனம்
  • கதமஞ்சுசா

கவிதைகள்

  • குசுமோபகாரம்
  • பிரதிசுனா
  • கேரளாயுதயம் மகாகாவியம்

கட்டுரைகள்

  • இலையும் வேரும்
  • கதிர்குலா
  • உழுத நிலங்கள்
  • எழிலம்பலா
  • கிரணங்கள்
  • தீபமாலா

மொழிபெயர்ப்புகள்

  • குறுந்தொகை
  • கவிதைக்கொரு சதுகரனம்
  • வேணிசம்கரம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கே._என்._எழுத்தச்சன்&oldid=19025" இருந்து மீள்விக்கப்பட்டது