கே. ஆர். வேணுகோபால் சர்மா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. ஆர். வேணுகோபால் சர்மா
கே. ஆர். வேணுகோபால் சர்மா
இயற்பெயர்/
அறியும் பெயர்
கே. ஆர். வேணுகோபால் சர்மா
பிறந்ததிகதி 17 டிசம்பர் 1908
பிறந்தஇடம் சேலம்
இறப்பு ஜூலை 31 1989
தேசியம் இந்தியர்
அறியப்படுவது தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்தது
பிள்ளைகள் ஸ்ரீராம் சர்மா [1]
இணையதளம் krvenugopalsarma.blogspot.com

கே. ஆர். வேணுகோபால் சர்மா தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் ஆவார்.[2] இவர் 17.12.1908 இல் அன்றைய சேலம் ஜில்லா காமாட்சிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இன்று அது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடங்கியுள்ளது. இவரால் வரையப்பட்டு சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற சாதனையாளர்களின் திருவுருவங்கள் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரது படங்கள் ஆகும் .[3] தமிழ்த்தாய் திருவுருவுக்கு இலக்கியங்களில் வடிவம் ஒன்று சொல்லப்படவில்லை. 1979 ல் அன்றைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் படி தனது நீண்ட தமிழ் ஆராய்ச்சி கொண்டு இவர் வரைந்து முடித்த தமிழ்த்தாய் திருவுருவம் இன்றும் வெளிவராமலேயே நிற்கின்றது.

தொழில்

மைசூர் சமஸ்தானத்தில் பால விகடகவியாக தன் வாழ்க்கையை துவங்கியவர் . காந்திய வழியில் வந்த குடும்பத்தை சேர்ந்த இவர், "ஸ்வதேச டிராமா பார்ட்டி" என்ற பெயரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன் நண்பர்களோடு சேர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். தலைமறைவு வாழ்க்கையில் பம்பாய்க்கு சென்று, அங்கு பிரபல திரைப்பட இயக்குநரான பகவான் தாதாவிடம் சினிமா கலையினைக் கற்றுக்கொண்டார். சென்னைக்கு திரும்பி 'கிரீன் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் துவக்கி, நாத விஜயம், தெய்வீகம், மை சன் ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கினார். சமஸ்தானத்தில் சம்பாதித்த பொருள் அனைத்தையும் இழந்தார். சென்னையில், மிச்சமிருந்த ஒரு சிறிய பங்களாவையும் விற்று - தமிழக ஓவியக் கலைஞர்களின் திறமையை உலகுக்கு எடுத்து சொல்லும் முயற்சியில் ஓவியக் கலைக்கூடம் ஒன்றை ' பொன்னி ஆர்ட்ஸ் ' என்ற பெயரில் சென்னை லாயட்ஸ் ரோட்டில் அமைத்தார். அதுவும் எடுபடாமல் தோற்றார்.

திருவள்ளுவரின் படத்தை வரைதல்

சுமார் 30 ஆண்டுகள் திருக்குறளை ஆராய்ச்சி செய்து திருவள்ளுவரின் திருவுருவத்தை கண்டடைந்தார் .[4] மத்திய அரசும் ( 1960 ) தமிழக அரசும் ( 1964 ) இவரது ஓவியத்தை வள்ளுவரின் அதிகாரப்பூர்வமான ஓவியமாக ஏற்றுக் கொண்டன.

அங்கீகாரம்

முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.[5] இவர் வரைந்தளித்த திருவள்ளுவர் திருவுருவத்தை, பள்ளி - கல்லூரிகள் , பேருந்துகள் - போலீஸ் நிலையங்கள் - நீதிமன்றங்கள் என தமிழக அரசாங்கத்துக்குரிய அனைத்துக் கோட்டங்களிலும் நிறுவச் செய்து அரசாணை பிறப்பித்தார். அரசாணை எண் : GO.MS 1193.

மற்றவர்கள் வரைந்த படங்கள்

திருவள்ளுவரை பல்வேறு காலகட்டங்களில் ஓவியர்கள் பலர் வெவ்வேறு கோணங்களில் வரைந்தார்கள். அவை பெரும்பாலும் சமய சார்புள்ளதாகவும் மத சார்புள்ளதாகவுமாகவே அமைந்திருந்ததால் மக்களும் அரசாங்கங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவற்றையும் காண்க

ஆதாரம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கே._ஆர்._வேணுகோபால்_சர்மா&oldid=6916" இருந்து மீள்விக்கப்பட்டது