கென் அரோக்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கென் அரோக்
Ken Arok
Ken Angrok Rajasa
சிங்காசாரி அரசர் கென் அரோக்
ஆட்சிக்காலம்1222 – 1227
பின்னையவர்அனுசபதி
பிறப்புc. 1182
கிழக்கு ஜாவா
இறப்புc. 1227
சிங்காசாரி, மாலாங், கிழக்கு ஜாவா
புதைத்த இடம்
காகேனங்கான் கோயில்
துணைவர்கென் தெடிஸ்
கென் உமாங்
பெயர்கள்
Sri Ranggah Rajasa
மரபுஇராஜசா அரசமரபு
தந்தைகென் மாசிம்
தாய்கென் என்டோக்

கென் அரோக் அல்லது கென் அரோக் இராஜசா (ஆங்கிலம்: Ken Arok; Ken Angrok Rajasa; இந்தோனேசியம்: Ken Arok Sri Ranggah Rajasa) (இறப்பு: 1227) என்பவர் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் இந்திய மயமாக்கப்பட்ட ஓர் இடைக்கால இந்து-பௌத்த இராச்சியமான சிங்காசாரி இராச்சியத்தின் நிறுவனர்; மற்றும் முதல் ஆட்சியாளர் ஆவார்.[1]

சிங்காசாரி மற்றும் மஜபாகித் பேரரசுகளின் அரச மரபுகள் இரண்டையும் நிறுவியவராக இவர் கருதப்படுகிறார். அந்த இரண்டு பேரரசுகளின் இராஜசா அரசமரபு சார்ந்த ஆட்சியாளர்களின் முன்னோடியாகவும் அறியப்படுகிறார்.[2] பழைய ஜாவானிய மொழி; மற்றும் சமசுகிருத மொழியில் இராஜசா என்ற சொல்லுக்கு ஆர்வம் அல்லது தூசி/மண் என்று பொருள்.[3]

இவர் ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், பின்னர் காலத்தில், ஜாவாவின் மிகவும் சக்திவாய்ந்த ஆட்சியாளராக மிக உயர்ந்த நிலையை அடைந்தவர். இவரின் வாழ்க்கை முழுவதும் சர்ச்சைகள், சாகசங்கள், துரோகங்கள் மற்றும் துயரங்கள் நிறைந்தவை.[4]:185–188

வாழ்க்கை

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
ஒரு மேடை நாடகத்தில் கென் அரோக்கின் மனைவி கென் தெடிஸ் போல ஒரு நடிகையின் தோற்றம்

ஜாவா மன்னர்களைப் பற்றிய புராண இலக்கியப் படைப்பான பாராரத்தோன் கூற்றுப்படி, கென் அரோக், கிழக்கு ஜாவாவில் உள்ள பிரந்தாஸ் ஆற்றங்கரையில் ஓர் ஏழை வேளாண் குடும்பத்தில் பிறந்தார். அவர் செரி ஜெயமெர்தா (Sri Jayamerta) மற்றும் கென் எண்டோக் (Ken Endok) தம்பதியரின் மகனாவார்.

கென் அரோக் கைக்குழந்தையாக இருக்கும் போது, குடும்பத்தின் ஏழ்மைநிலை காரணமாக அவரின் பெற்றோர் பிரந்தாஸ் ஆற்றங்கரையில் கைவிட்டு வந்துவிட்டனர். கென் அரோக் ஒரு பணக்கார குடும்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு சிறந்த வாழ்க்கை தருவார்கள் என்று நம்பினார்கள். இருப்பினும், குழந்தை கென் அரோக்கை லெம்போங் (Lembong) என்ற திருடன் முதலில் கண்டுபிடித்தான்.

வளர்ப்புத் தந்தையான லெம்போங், கென் அரோக்கிற்கு குற்றவியல் திறன்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். அதன்பின்னர், இளம் கென் அரோக் கேடிரியில் மிகவும் தந்திரமான திருடனாக வளர்ந்தான். அதிக குறும்புகள் மற்றும் குற்றங்களைச் செய்ததால், அவனைப் பற்றி நகரம் முழுவதும் தெரிய வந்தது.[5] அவனைப் பிடிக்க பலர் அனுப்பப்பட்டனர். ஆனால் எவராலும் கென் அரோக்கைப் பிடிக்க முடியவில்லை.[6]

மாபூ லோகா

படிமம்:Bali-lontar-Tojan-Kénangrok.jpg
பாலி தீவில் கிடைக்கப்பெற்ற கென் அரோக் எழுத்துச்சுவடி
படிமம்:Singhasari Temple.jpg
கிழக்கு ஜாவாவில் 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிங்காசாரி இந்து ஆலயம்

ஒரு நாள் கென் அரோக், இந்திய ரிஷியான மாபூ லோகா (Mpu Lohgawe) என்பவரைச் சந்தித்தார். கென் அரோக் தன் பாவ வாழ்க்கையை கைவிட்டு, புதிய வாழ்க்கையைத் தொடங்கி பொறுமையாக வாழ ரிஷி மாபூ லோகா கற்றுக் கொடுத்தார். கென் அரோக்கை விஷ்ணுவின் அவதாரமாக ரிஷி மாபூ லோகா அறிவித்தார். ரிஷியின் முயற்சி வெற்றி பெற்றது, பின்னர் ரிஷி மாபூ லோகா, கென் அரோக்கை துமாபெல் பகுதியின் சக்திவாய்ந்த பிராந்தியத் தலைவரான துங்குல் அமெதுங் (Tunggul Ametung) என்பவருக்கு உதவியாளராகச் சேர்த்துவிட்டார்.

தற்செயலாக கென் அரோக் ஒருநாள், துங்குல் அமெதுங்கின் அழகான மனைவி கென் தெடிஸை (Ken Dedes) பார்க்க நேர்ந்தது. அவரின் அழகில் மயங்கிய கென் அரோக், கென் தெடிஸை அடைய முயற்சி செய்தார்.[7] இதற்கிடையில், கென் தெடிஸின் கணவர் துங்குல் அமெதுங் கொலை செய்யப்பட்டார். அதற்கு கென் அரோக்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கென் அரோக், தன்னை துமபல் பிராந்தியத்தின் புதிய ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார்; [8] மற்றும் கென் தெடிஸையும் மணம் செய்து கொண்டார்.

கென் அரோக்கின் இலட்சியப் பயணம் துமபல் பிராந்தியத்தின் தலைவரான பின்னரும் முற்றுப் பெறவில்லை. 1222-ஆம் ஆண்டில், காண்டர் போரில் (Battle of Genter), அவர் கேடிரி மன்னர் கீர்த்தஜெயனை (Kertajaya) தோற்கடித்து, சிங்காசாரி என்ற புதிய இராச்சியத்தை நிறுவினார். கேடிரி அரசு, சிங்காசாரி இராச்சியத்தின் கீழ் ஓர் அடிமை மாநிலமாக மாறியது.[9][10]

ஆட்சி

படிமம்:Prajnaparamita Java Side Detail.JPG
கிழக்கு ஜாவாவில் 1818-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட போதிசத்வா தேவி சிலை; கென் அரோக்கின் மனைவி கென் தெடிசுக்காக செதுக்கப்பட்டது.

கென் அரோக் ஒரு புதிய இராச்சியத்தை நிறுவி ஒரு புதிய அரச மரபையும் தொடங்கினார். அவர் செரி ரங்க ராஜச பதாரா அமுர்வபூமி (Sri Ranggah Rajasa Bhatara Amurwabhumi) (பிரபஞ்சம் மற்றும் அனைத்து நிலங்களின் வானவில் அரச்ர்) என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் அவரின் அரசமரபு இராஜசா அரசமரபு என்று அழைக்கப்பட்டது. அவரின் புதிய இராச்சியம் சிங்காசாரியை (தற்போது கிழக்கு ஜாவா மாலாங் நகராட்சி) மையமாகக் கொண்டது. இது கேடிரிக்கு கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தன் பதவியேற்பு நிகழ்ச்சியைச் சட்டப்பூர்வமாக்க, தன்னைத் தமிழ்க் கடவுளார் சிவனின் மகன் என்று கூறிக்கொண்டார்.

இருப்பினும், கென் அரோக்கின் ஆட்சி குறுகிய ஆட்சியாக இருந்தது. கென் தெடிஸ் மற்றும் துங்குல் அமெதுங் தமபதியரின் மகனும், கென் அரோக்கின் வளர்ப்பு மகனுமான அனுசபதி, தன் தந்தை துங்குல் அமெதுங்கின் மரணத்திற்கு கென் அரோக் தான் காரணம் என்று நீண்ட காலமாக சந்தேகித்து வந்தார்.[11] ஒரு நாள், உண்மையைக் கண்டுபிடித்த பிறகு, அனுசபதி கென் அரோக்கைக் கொன்றார்.[12]

மஜபாகித்தின் மன்னர்கள் அனைவரும் கென் அரோக்கின் வழித்தோன்றல்கள் என்றும்; மாதரம் ஆட்சியாளர்களும் கூட கென் அரோக்கின் வழித்தோன்றல்கள் என்றும் நம்பப்படுகிறது. மாதரத்தை நிறுவிய கியாய் அஜெங் பெமானகான் (Ki), என்பவரும் மஜபாகித்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தன்னைக் கூறிக் கொண்டார்.

வழித்தோன்றல்கள்

தற்போது, அனைத்து மாதரம் மன்னர்களும் கென் அரோக்கின் வழித்தோன்றல்களாக அறியப் படுகிறார்கள்.[13] கென் அரோக் 17-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட புதிய மாதரம் பேரரசின் மூதாதையர் என்றும் நம்பப்படுகிறது.[13] இந்தப் பேரரசு 1755 இல் இரண்டாகப் பிரிந்து இன்றைய சுராகார்த்தா மற்றும் நாகயோக்யகர்த்தா ஆகிய இரு இராச்சியங்களாக மாறியது. இதனால் கென் அரோக்; கென் தெடிஸ் இருவரும் அனைத்து ஜாவானிய மன்னர்களின் மூதாதையர்களாக அறியப் படுகின்றனர்.[13]

கென் அரோக்கின் கதை மத்திய ஜாவா மற்றும் கிழக்கு ஜாவாவில் ஒரு பிரபலமான வரலாற்றுக் காவியமாகத் திகழ்கிறது. இந்தோனேசியாவில் அவரைப்பற்றி பல நூல்களும் திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. பல மேடை நாடகங்களில் அவரின் வாழ்க்கை வரலாறு ஒரு கருப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East Timor". Southeast Asia: a historical encyclopedia, from Angkor Wat to East Timor (3 vols). (2004). Santa Barbara: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1576077702. இணையக் கணினி நூலக மையம் 646857823.  Ooi, Keat Gin (2004). p. 1208.
  2. Ooi, Keat Gin (2004). Southeast Asia: a historical encyclopedia. Bloomsbury Academic. ISBN 9781576077702. Retrieved 2010-07-25.
  3. "Rajasa". Sanskrit dictionary.
  4. Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. ISBN 9780824803681.
  5. "Ken Arok - Ken Dedes (1983) - Plot - IMDb". Plot. Retrieved 25 February 2025.
  6. Ago, Gibicin #sankofa • 7 Years (16 July 2018). "The Tale of Ken Angrok and The Cursed Dagger". Steemit (in ஆங்கிலம்). Retrieved 25 February 2025.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  7. "Dedes: A Tale of Love, Betrayal, and Karma". adrianasinggih. Retrieved 25 February 2025.
  8. "The #1 AI Storytelling Platform". Story.com (in ஆங்கிலம்). Retrieved 25 February 2025.
  9. "Surviving Legend, Surviving 'Unity in Diversity' a Reading of Ken Arok and Ken Dedes Narratives'" (PDF). Novita Dewi: National University of Singapore. Retrieved 25 February 2025.
  10. "Ken Arok Ken Dedes Pdf Downloadl". sites.google.com. Retrieved 25 February 2025.
  11. "Anusapati also learned that Tunggul Ametung was killed by Ken Arok using the keris Mpu Gandring, which made him want to take revenge on his stepfather". kompas. Retrieved 25 February 2025.
  12. Retnaningdyah, Pratiwi (14 March 2013). "ABUSIVE POWER IN MACBETH AND THE LEGEND OF KEN AROK: A COMPARATIVE ANALYSIS OF AN ELIZABETHAN DRAMA AND A JAVANESE FOLKLORE". Culture, Literature, and Me (in ஆங்கிலம்). Retrieved 25 February 2025.
  13. 13.0 13.1 13.2 "The myth of Ken Dedes in the mother cult of East Javanese society". ResearchGate. Rainbow Journal of Literature Linguistics and Cultural Studies. Retrieved 25 February 2025.

நூல்கள்

முன்னர்
இல்லை
சிங்காசாரி அரசர்கள்
கென் அரோக்
1182–1227
பின்னர்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கென்_அரோக்&oldid=337836" இலிருந்து மீள்விக்கப்பட்டது