கூவன்மைந்தன்
Jump to navigation
Jump to search
கூவன்மைந்தன் (கூவல் மைந்தன்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 224 எண்ணில் உள்ள ஒரே ஒரு பாடல் இவரால் பாடப்பட்டதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது.
பாடல் சொல்லும் செய்தி
- திணை - பாலை
- வழிகள் பலவாகப் பிரியும் காட்டுவழியில் அவர் செல்கிறார் என்று சொல்கிறாய். அதனால் நான் படும் வேதனையைச் சொல்லமுடியாமல் அந்த ஊமையனைப் போலத் துடிக்கிறேன் - தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
உவமை
- குரால் = செவலை மாடு
- கூவல் = பயன்படுத்தாத நீர் தேங்கியுள்ள கிணறு
நள்ளிரவில் குரால் பசு ஒன்று கூவல் கிணற்றில் விழுந்துவிட்டது. அதனை ஊமையன் ஒருவன் பார்த்தான். அவன் என்ன செய்யமுடியும்? அதுபோலத் தலைவியின் தவிப்பு உள்ளது.