கூக்கல்துறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நீலகிரி மாவட்ட கிராமங்கள்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. வடகிழக்கில் கோடநாடு,தென்கிழக்கில் கெத்தை, மேற்கில் முதுமலை, வடமேற்கில் கூக்கல்துறை என உள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன.

கர்நாடகப் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு வர உதவும் மேற்குக் கணவாயாக கூக்கல்துறை கிராமம் உள்ளது. நீலகிரி மாவட்ட வருவாய்க் கிராமங்களில் ஒன்றான கூக்கல் கிராமத்திற்கு [1] கிராமம் இதுவாகும். சிறியூர் என்ற மசினகுடிக்கு அருகில் உள்ள இருளர் கிராமத்தில் இருந்து கூக்கல்துறைக்கு ஒற்றையடி பாதையும் உள்ளது. ஆண்டுதோறும் கூக்கல் துறை சுற்று வட்டாரங்களில் இருந்து மாரியம்மன் கோவில் திருவிழாவிற்குச் சிறியூருக்குச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. கூக்கல் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட ஓர் ஊராக கூக்கல் துறை உள்ளது.

அரசு மருத்துவ மனை, அரசு உயர்நிலைப்பள்ளி[2], கனரா வங்கி[3], கூட்டுறவு வங்கி என பல்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. எட்டட்டி எனப்படும் எட்டு படுக சமுதாய ஊர்களும் 24 தமிழர், மலையாளிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக மக்களின் ஊர்களும் கூக்கல்துறையைச் சுற்றிலும் உள்ள மலைகளில் உள்ளன.

மக்கள்

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக மைசூரிலிருந்து பந்திப்பூர் காடுகளின் வழியாக படுக சமுதாய மக்கள் குடியேறினர் என்றச் செய்தியைக் குறிஞ்சித் தேன் என்ற நூலில் குறிப்பிடுகிறார் ராஜம் கிருஷ்ணன். படுகர்களில் ஒரு பிரிவினரான கௌடர்கள் கூக்கல் கிராமம் வழி வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார் சுகுமாரன்.

விவசாயம்

இங்கு தேயிலை, காப்பி போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுவதில்லை. காரணம் இங்குள்ள காலநிலை பணப்பயிர்களுக்கு ஏற்றதாக இல்லாமல் தற்காறிகளுக்கு ஏற்றதாக மட்டுமே உள்ளது தான். உலகப் புகழ் பெற்ற ஆரஞ்சு பழங்கள் இங்கு விளைகின்றன. இந்தப் பகுதி ஆரஞ்சு பழத்துக்குப் புகழ்பெற்றது. தற்போது ஆரஞ்சு பழங்கள் பயிரிடுவது குறைந்துள்ளது. தற்காறி வகைகளான காரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைக் கிழங்கு, பீட்ரூட் போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. சீனக் காய்கறிகள் தற்போது நாம்தாரி போன்ற நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

எல்க் அருவி

எல்க் அருவியானது கோத்தகிரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உயிலட்டி கிராமத்தின் கீழ்ப்புறம் உள்ளது [4] கட்டபெட்டு பகுதியில் உற்பத்தியாகி கூக்கல்துறை வழியே ஓடும் சிற்றாறு பவானிசாகர் அணையில் கலக்கிறது. மழைக்காலத்தில் மட்டுமே இதில் தண்ணீர் வரும். படுகர் இன மக்களின் குடி இருப்பு வழியே இந்த இடத்துக்குச் செல்லும் சாலை ஊடுருவிச் செல்கிறது. இந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக நகர்ந்தால் கூக்கல் பள்ளத்தாக்கின் அழகிய தோற்றத்தை ரசிக்க முடியும்.

கன்னேரிமுக்கு சல்லிவன் பங்களா

1819 ஆம் ஆண்டு ஆணையராக இருந்த சல்லிவன் கட்டிய இரண்டடுக்கு மாளிகை இப்போது சிதைந்த நிலையில் இருக்கிறது.[5] தமிழக அரசால் சல்லிவன் மாளிகை தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.[6]நீலகிரி மலையில் அந்நாளில் கட்டப்பட்ட முதல் ஐரோப்பியர் குடியிருப்பு இதுதான். எல்க் அருவி நீர்வீழ்ச்சி கூக்கல்துறைக்கு முன் அரை கிலோ மீட்டர் முன்பாகவே உள்ளது. [7]

1978 - மழை வெள்ளச் சேதம்

1978-இல் பெருவெள்ளம் ஏற்பட்ட போது இந்த கூக்கல்துறை பகுதிக்கு அன்றைய முதல்வராக இருந்த ம. கோ. இராமச்சந்திரன் வருகை புரிந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். [8] 1978 வெள்ளத்தில் ஏராளமான உயிர்கள் பலியாயின. அதன் பின்னர் இப்பகுதியில் அரசு சார்பில் பாலம் கட்டப்பட்டு, ஆற்றங்கரையோரப் பகுதி மக்கள் கிருத்துவ மறைபணியாளர்களின் பெருங்கொடையால் பொன்நகர் என்ற ஓர் உருவாக்கப்பட்டு மக்கள் புதிய குடியிருப்பில் அமர்த்தப்பட்டனர்.

அமைவிடம்

[9][10]

சான்றுகள்

குறிஞ்சித் தேன்,ராஜம்.கிருஷ்ணன், பக்.1-2, மலைநாட்டு மண்ணின் மைந்தர்களும் பண்டைய பழக்க வழக்கங்களும், ரா.சுகுமாரன், ப.9.

  1. "=". Archived from the original on 2022-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL, KOOKALTHORAI - Kookal, District The Nilgiris (Tamil Nadu)". schools.org.in (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  3. "CANARA BANK KOOKALTHORAI,Branch IFSC Code, MICR Code, Address & Phone Number". The Economic Times (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  4. ta.vikaspedia.in https://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/b9abc1bb1bcdbb1bc1bb2bbe-ba4bb2b99bcdb95bb3bcd/ba4baebbfbb4b95-b9abc1bb1bcdbb1bc1bb2bbe-ba4bb3b99bcdb95bb3bcd/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. "கோத்தகிரி அருகே, சுற்றுலா பயணிகளை கவரும் ஜான் சல்லீவன் நினைவகம்". Dailythanthi.com. 2019-05-28. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  6. "கலெக்டர், Collector". DailyThanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  7. "::: TTDC-TAMIL-ARIYALUR :::". www.tamilnadutourism.org. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  8. "பலி, victim". DailyThanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  9. "CPQ wt Allele", Definitions, Qeios, 2020-02-07, பார்க்கப்பட்ட நாள் 2022-02-26
  10. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
"https://tamilar.wiki/index.php?title=கூக்கல்துறை&oldid=41783" இருந்து மீள்விக்கப்பட்டது