கூகுள் பீம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கூகுள் பீம் (Google Beam) துவக்க நிலையில் புராஜெக்ட் ஸ்டார்லைன் என்று அழைக்கப்பட்ட இது கூகுளின் சோதனை நிலையில் இருக்கும் நிகழ்படத் தகவல்தொடர்பு முறையாகும். இதன்மூலம் தொடர்பு கொள்ளும் நபரின் முப்பரிமான மாதிரியினைக் காண இயலும். 2021 கூகுள் ஐ/ஓ மேம்பாட்டாளர் மாநாட்டில் இது குறித்தான அறிவிப்பு வெளியானது. இது இயந்திரக் கற்றல், இடஞ்சார்ந்த ஒலி, கணினிப் பார்வை, நிகழ்நேரச் சுருக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எவ்விதமான மெய்நிகர் கருவிகளும் இல்லாமல் முப்பரிமான நிலையில் பயனர்களை "இயற்கையாகவே பேசவும், சைகை செய்யவும், கண்வழித் தொடர்பு கொள்ளவும்" அனுமதிக்கும் என்று கூறப்பட்டது.[1][2] மற்ற பயனருடன் ஒரே அறையில் இருப்பதைப் போல பயனரை உணர வைப்பதே இதன் குறிக்கோளாகும். [3][4]

வளர்ச்சி நிலைகள்

2021 மே 18-இல் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சோதனை நிலையில் இருந்தது.[5][6] இந்தத் தொழில்நுட்பம் தற்போது சில கூகுள் அலுவலகங்களில் மட்டுமே கிடைக்கிறது.

மேற்கோள்கள்

  1. "Project Starline: Feel like you're there, together". Google (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-18. Retrieved 2021-05-20.
  2. "Project Starline: Google's video chat makes it look like users are physically in the same room". techxplore.com (in ஆங்கிலம்). Retrieved 2021-05-20.
  3. Molina, Brett. "Project Starline: Google's video chat makes it look like users are physically in the same room". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-05-20.
  4. Perry, Alex. "Google Starline could turn video calls into 3D holographic experiences". Mashable (in ஆங்கிலம்). Retrieved 2021-05-20.
  5. . 
  6. May 2021, Mark Spoonauer 18. "Google I/O 2021 recap: Android 12, Wear OS, Project Starline and all the big news". Tom's Guide (in ஆங்கிலம்). Retrieved 2021-05-20.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கூகுள்_பீம்&oldid=336912" இலிருந்து மீள்விக்கப்பட்டது