குழலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குழலி
Kuzhali
இயக்கம்சேரா கலையரசன்
நடிப்பு
  • விக்னேசு
  • ஆரா
  • மகா
வெளியீடுசெப்டம்பர் 23, 2022 (2022-09-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குழலி (Kuzhali) என்பது நடிகர் விக்னேசு மற்றும் நடிகை ஆரா நடிப்பில், சேரா கலையரசன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் நாளன்று குழலி திரைப்படம் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

தயாரிப்பு

விக்னேசு மற்றும் எசுத்தர் அனில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படத்தின் தயாரிப்பு தொடங்கியது. படப்பிடிப்பைத் தொடங்கிய பின்னர் நடிகை திட்டத்திலிருந்து விலகியதால் நடிகை ஆரா மாற்றப்பட்டார்.[1][2]

வரவேற்பு

குழலி திரைப்படம் 23 செப்டம்பர் 2022 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. மாலை மலர் செய்தித்தாளில் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனம் கிடைத்தது. "இனிமையானது" என்று குறிப்பிட்டு, 5 நட்சத்திரங்களுக்கு 2.75 நட்சத்திரம் என்ற மதிப்பும் அளிக்கப்பட்டது.[3] தினமலர் நாளிதழில் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் அளிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

  1. "Vignesh upbeat about turning hero". 21 May 2017.
  2. "Vignesh and Esther show how fast time flies - 'Kuzhali' stills inside - News". 18 May 2017.
  3. "Kuzhali". 23 September 2022.
  4. "குழலி".
"https://tamilar.wiki/index.php?title=குழலி&oldid=32493" இருந்து மீள்விக்கப்பட்டது