குலோத்துங்கச் சோழப்பட்டினம்
Jump to navigation
Jump to search
குலோத்துங்கச் சோழப்பட்டினம் என்பது பாண்டியர் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுள் ஒன்று. இது கி.பி. 1090 - 1271 வரை அதிகம் அறியப்பட்டத் துறைமுகமாக விளங்கிற்று. சிலர் இது பிற்காலப்பாண்டியர்களின் பவித்ரமாணிக்கப்பட்டினம் என்று கூறுவர்.[1] இது குலோத்துங்கச் சோழன் காலத்தில் பாண்டி நாட்டில் உருப்பெற்றிருந்தாலும்[2] சிலர் மகாவம்சம் கூறும் கோட்டைகள் சூழ்ந்த பராக்கிரம்மன் பாண்டியப்பட்டினம் பிற்பாடு குலோத்துங்கன் காலத்தில் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர்.[3]
சிறப்பு
- மூலம் - பெரியப்பட்டினம்[3]
- இப்பட்டினத்தின் வழி அரபு மற்றும் சீன நாடுகளுடன் வணிகத்தொடர்புகள் இருந்துள்ளன. இதை மார்க்கோப்போலோ, இபின்தூதா போன்றவர்கள் பத்தன் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
- ஏமன் நாட்டிற்குச் செல்ல இப்பட்டினத்தில் 8 கப்பல்கள் நின்றதாக இபின்தூதா கூறுவதைக் கொண்டு அரபு நாடுகளுடனான இதன் வணிக முக்கியத்துவத்தை அறியலாம்.
- இப்பட்டினம் சீனநாட்டுடன் வைத்திருந்த உறவை நிறுவும் விதமாக இங்கு சீன நாட்டு மட்கலன்களும் கி.பி. 9 - 14ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட சீனக்காசும் கிடைத்துள்ளது.
மூலம்
- பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள் (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.
மேற்கோள்கள்
உசாத்துணை
- தமிழகக் கடல்சார் ஆய்வுகள், ந. அதியமான் மற்றும் பா. ஜெயக்குமார், தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2006.