குற்றம் புரிந்தால்
குற்றம் புரிந்தால் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | டிஸ்னி |
இசை | கே. எஸ். மனோஜ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கே. கோகுல் |
படத்தொகுப்பு | எஸ். பி. அகமத் |
கலையகம் | அமராவதி பிலிம்சு சுடியோசு |
வெளியீடு | பெப்ரவரி 24, 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குற்றம் புரிந்தால் (Kuttram Purinthal) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை டிஸ்னி இயக்கியிருந்தார். ஆதிக் பாபு, அபிநயா அர்ச்சனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 2023 பெப்ரவரி 24 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- ஆதிக் - ஜீவா
- அர்ச்சனா - திவ்யா
- அபிநயா - உமா
- எம். எசு. பாசுகர்
- நிசாந்த்
- இராமச்சந்திரன் துரைராஜ்
- அருள் சங்கர்
- வெற்றிவேல்
தயாரிப்பு
படத்தின் தயாரிப்பு 2018 இன் தொடக்கத்தில் தொடங்கியது.அபிநயா ஒரு காவல் அதிகாரியாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இப்படத்தில் நடிகர் ஆதிக் பாபு அறிமுகமானார். [2]
வரவேற்பு
இப்படம் 2023 பெப்ரவரி 24 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. தினத்தந்தியின் ஒரு விமர்சகர், படத்தின் திரைக்கதையில் அறிமுகப்படுத்தப்பட்ட திருப்பங்களைப் பாராட்டி படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்தார். [3] மாலை மலரின் ஒரு விமர்சகர், "சமூகத்தின் தற்போதைய பிரச்சினையை எடுத்துரைத்ததற்காக இயக்குநர் டிஸ்னியைப் பாராட்டலாம்" என்று குறிப்பிட்டார்.
மேற்கோள்கள்
- ↑ "Abhinaya dons cop avatar in KP". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.
- ↑ "MS Bhaskar gave me a lot of confidence, says 'Kuttram Purinthal' actor Aadhik Babu - Exclusive". Timesofindia.indiatimes.com. 2023-02-16. பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.
- ↑ "குற்றம் புரிந்தால் : சினிமா விமர்சனம்". February 25, 2023.