குருகு (கொடி)
Jump to navigation
Jump to search
குருகு என்னும் சொல்லால் குறிப்பிடப்படும் பொருள்களில் ஒன்று குருகுக்கொடி. குருகு என்பது காஞ்சி மரத்தில் ஏறிப் படரும் ஒரிவகைகு கொடி. அதன் பூக்கள் பால் நுரை போல மரத்தடியில் கொட்டிக் கிடக்கும். [1]
(உண்கலமாகப் பயன்பட்ட) குருகின் இலை குருகு இலை உதிர்வது கண்டு மக்கள் வருந்தினர். [2]
ஈந்து மரத்தில் படர்ந்திருக்கும் குருகு(க்கொடி) கோடையின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் உருகி வாடும். [3]
அடிக்குறிப்பு
- ↑ குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
காரகற் கூவியர் பாகொடு பிடித்த
விழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோ
னிழல்தாழ் வார்மண னீர்முகத் துறைப்ப - பெரும்பாணாற்றுப்படை 376 - ↑ குருகு இலை உதிரும், பரிபாடல் 15-41
- ↑ காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை (அகநானூறு 55)