குருகு (உலை)
Jump to navigation
Jump to search
குருகு என்னும் சொல் உணர்த்தும் பொருள்களில் ஒன்று கொல்லன் உலைக்களத்தில் உள்ள ஊதுலை. [1]இது இரும்பைக் காய்ச்சும் உலையில் எரியும் தீயைத் தீக்கு அடியிலிருந்து காற்றை ஊதப் பயன்படும். கறையான் இந்த உலைக்களத்தில் உள்ள துரும்புகளையும் பற்றி இரையாக்கிக்கொள்ளும் என ஒரு பாடல் குறிப்பிடுகிறது. [2] இதனைக் காலால் மிதித்து இயக்கியும் ஊதுவர். [3] இதனைக் கொல்லன் ஊது உலைக்குருகு என நற்றிணையும் [4] மணிமேகலையும் [5] குறிப்பிட்டுத் தெளிவுபடுத்துகின்றன. தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி இந்த ஊதுலைக் குருகு போலப் பெருமூச்சு விட்டான் என நற்றிணைப் பாடலும், கணவன் மாண்டால் கற்புடை மனைவி ஊதுலைக் குருகு போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டு அவன் எரியும் தீயில் தானும் விழுந்து உயிர் துறப்பாள் என மணிமேகலையும் தெரிவிக்கின்றன.
அடிக்குறிப்பு
- ↑ அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் - அகநானூறு 96 - ↑ புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் (அகநானூறு 81) - ↑ கொல்லன் குருகு ஊது மிதி உலை (அகநானூறு 202)
- ↑ கொல்லன் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, (நற்றிணை 125)
- ↑ காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
ஊதுஉலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின்(45)
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்
நளிஎரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன்உறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் - மணிமேகலை 2 ஊர் அலர் உற்ற காதை