கும் கும் கன்னா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கும் கும் கன்னா (Kum Kum Khanna) என்பவர் குயின்ஸ்லாந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் என்றும் அழைக்கப்படும் க்யூஐஎம்ஆர் பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் இந்தியர் ஆவார். இவர் நேச்சர் ஜெனடிக்ஸ், கேன்சர் செல், நேச்சார், ஆன்கோஜீன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஆய்விதழ்களில் பல மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[1] இவரது மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை 200 இல் வெளியிடப்பட்டதிலிருந்து 28054 மேற்கோள்களைப் பெற்றுள்ளது.[2] செப்55 என பெயரிடப்பட்ட ஒரு புதிய புரதமான டி. என். ஏ. பழுதுபார்ப்பில் ஈடுபட்டுள்ள ஒற்றை-இழையுள்ள டி. என். எ. பிணைப்பு புரதங்கள், எச்எஸ்எஸ்பி 1 மற்றும் எச்எஸ்எஸ்பி 2 ஆகியவற்றை அடையாளம் காண்பதில் முக்கியக் கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். உயிரணு சுழற்சியின் இறுதிக் கட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபடும் இப்புரதம் செப்55 எனப்படுகிறது. பிஆர்சிஏ 2 ஊடாடும் புரதம், சென்ட்ரோபினின் முழுச் செயல்பாடு அறியப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கும்_கும்_கன்னா&oldid=18004" இருந்து மீள்விக்கப்பட்டது