கும்பகோணம் வள்ளலார் கல்வி அறநிலையம்
வள்ளலார் கல்வி அறநிலையம் எனபது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஆதரவு அற்றவர்களுக்காக செயல்படும் ஒரு மேல்நிலைப் பள்ளியாகும்.
வரலாறு
1951ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ராமதாஸ் அண்ணா, பிச்சைமுத்து என்கிற நெய்க்கார அண்ணா மற்றும் அவரது நண்பர்களால் கும்பகோணம் சக்கரப் படித்துறையில் ஸ்ரீசண்முகானந்தா ஆசிரமம் என்ற ஆசிரமம் தொடங்கப்பட்டது. அதில் தாய் அல்லது தந்தை இல்லாத ஆதரவற்ற மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், 1954இல் கும்பகோணம் கொட்டையூர் காவிரி ஆற்றின் கரைக்கு ஆசிரமம் இடம் மாறியது. இதன்பிறகு ராமதாசும் அவரது நன்பர்களும் சேர்ந்து ஆசிரமத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி போதிப்பதற்காக வள்ளலார் கல்வி நிலையம் என்ற பாடசாலை தொடங்கினர். துவக்கக் கல்வியுடன் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிலையம், பின்னர் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. 2018 ஆண்டு காலகட்டத்தில் இங்கு 3,810 மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த ஆசிரமத்தில் படித்த பலர், பின்னர் இதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ வி.சுந்தர்ராஜ் (3 சூலை 2018). "காவிரிக் கரையில் கலங்கரை விளக்கம்: கும்பகோணம் ஆசிரமத்தின் கதை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2018.