குணப்பாடப் பாடல்கள் தமிழில் உள்ள தொன்மையான பாடல்களாகும். இவை மருத்துவ வழிகாட்டிகளாக விளங்குகின்றன. இதன் பொருளுணர்ந்து கொண்டால் நமக்கு நாமே மருத்துவராகக்கூடச் செயல்படலாம்.
உதாரணப் பாடல்கள்
மீன் உணவுகள்
மீன் உணவுகளைப் பொதுவாக அனைவரும் உண்பர். ஆனால் சில மீன்களை சிலர் உண்ணக்கூடாது; எவ்வகையான மீன்களை உண்டால் நோய் போகும் அல்லது நோய் ஏற்படும் என்று இப்பாடல்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
“
|
- ஆற்றுமீன் தாதுவை உண்டாக்கும்; ஐய வெப்பை
- ஊற்றும்; அருசியைவிட்டு ஓட்டும்காண்; - சாற்றும்
- கிணற்றுமீன் வாதகுன்மம், கீறுபித்தம், குட்டம்,
- பணைத்த பீலிகம்உறும் பார்.
|
”
|
“
|
- ஓடுமடு மீனால் உலவை பித்தங்கள் அறும்;
- தாது மேகம் கபம் மந்தங்கள் உண்டாம்; - ஓதுகுளம்
- ஆருமீன் தன்னால் அழற்பிணி, மந்தம் தீரும்;
- ஏரிமீன் மேகம்அடும் என்.
|
”
|
போன்ற பாடல்கள் ஆற்று மீன், குளத்து மீன், கிணற்று மீனின் பயன்களை நன்கு விளக்குகின்றன.
கோழிக் கறி
சூடுள்ள கோழிக் கறியின் நன்மை, தீமைகளை விளக்கும் பாடல்:
“
|
- கோழி்க் கறிநெருப்பாம், கொள்ளின் மருந்துறம்வங்
- கூழை கடுப்புமந்தம், கூறரசம் மாழ்கிப்போம்
- நீளுற்றபோகம், நிணக்கிரந்தி பித்தமுண்டாம்,
- தூளித்த மெய்இளைக்கும் சொல்
|
”
|