குணநாற்பது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குணநாற்பது என்னும் நூல் பண்டைய உரைநூலால் தெரியவரும் நூல்களில் ஒன்று. தொல்காப்பியம் இளம்பூரணர் உரையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

இதன் பாடலாக ஒன்று மட்டும் கிடைத்துள்ளது. இது தலைவனின் காமநோயைத் தீர்க்கும் மருந்து தலைவியின் தண்ணளி ஒன்று மட்டுமே எனப் கூறுகிறது. இந்தப் பாடலை எண்ணிப் பார்க்கும்போது இது கார்நாற்பது நூலைப் போன்றதோர் அகப்பொருள் பற்றிய நூல் எனத் தெரியவருகிறது.

இந்த நூலின் பாடலாகக் கிடைத்துள்ள ஒரே ஒரு பாடலில் பொற்கைப் பாண்டியன் வரலாற்றுக்கு இலக்கியச் சான்று உள்ளது. [2]

கருவிநூல்

  • தொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்) மூலமும் உரையும், உரையாசிரியர் இளம்பூரணர், வெளியீடு சாரதா பதிப்பகம், 2010 பதிப்பு,

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்) மூலமும் உரையும், உரையாசிரியர் இளம்பூரணர், வெளியீடு சாரதா பதிப்பகம், 2010 பதிப்பு, பக்கம் 549
  2. நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்தன்
    ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த
    பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்
    கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த
    விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்
    பன்மாண் சாயல் பரதவர் மகட்கே.

"https://tamilar.wiki/index.php?title=குணநாற்பது&oldid=17198" இருந்து மீள்விக்கப்பட்டது