குசுமாகரசு
இயற்பெயர் |
|
||
---|---|---|---|
பிறந்ததிகதி | 27 பெப்ரவரி 1912 | ||
பிறந்தஇடம் | புணே, மகாராட்டிரம் | ||
இறப்பு | 10 மார்ச்சு 1999 | (அகவை 87)||
புனைபெயர் | குசுமாகரசு | ||
பணி | கவிஞர், நாடக ஆசிரியர், புதின எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர், மாந்தநேயர் | ||
குறிப்பிடத்தக்க விருதுகள் | 1974 மராத்திக்கான சாகித்திய அகாதமி விருது 1988 ஞானபீட விருது |
||
இணையதளம் | kusumagraj |
விட்டுணு வாமன சிருவாதுகர் (Vishnu Vāman Shirwādkar, विष्णु वामन शिरवाडकर) (27 பிப்பிரவரி 1912 – 10 மார்ச்சு 1999), என்னும் எழுத்தாளர் குசுமாகரசு (குஷ்மாகரஜ் (வார்ப்புரு:Lang-mr) என்னும் புனைப்பெயரில் எழுதிவந்த புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதினப்படைப்பாளி, நாடக ஆசிரியர். இவர் மாந்தநேயராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் அறத்துக்காகவும் பாடுபட்டவராகவும் அறியப்படுகின்றார்[1].
எழுத்துப்பணி
இவருடைய ஏறத்தாழ ஐம்பதாண்டு எழுத்துப்பணி இந்தியா விடுதலை பெறும் முன்பிருந்தே தொடங்கிவிட்டது. 16, கவிதைத்தொகுப்புகளும், மூன்று தொகுதி புதினங்களும், எட்டுத்தொகுதி சிறுகதைகளும், ஏழு தொகுதி உரைநடைக் கட்டுரைகளும், 18 நாடகங்களும் ஓரங்க நாடகங்களும் எழுதி புகழீட்டியுள்ளார்[2]. இவர் எழுதிய விசாக (1942) என்னும் பாடற்தொகுப்பு இந்திய விடுதலைக்கு இயக்கத்தினருக்குப் பேரூக்கம் அளித்தது. இது இன்று இந்திய இலக்கியத்தில் உயர்படைப்பாகக் கருதப்படுகின்றது.[3]. இவருடைய நாடகப் படைப்பாகிய நாட்சம்ராட்டு (Natsamrat) மராத்தி எழுத்துலகில் போற்றப்படுகின்றது.
விருதுகள்
இவர் நாடளாவிய பல பரிசுகளைப் பெற்றுள்ளார், அவற்றுள் 1974 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது விருதும், 1988 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதும் குறிப்பிடத்தக்கன. இவர் உலக மராத்தி மாநாட்டின் தலைவராக 1989 இல் இருந்தார்[2]. இவர் மகாராட்டிரத்தில் புனே நகரத்தில் பிறந்தார், ஆனால் பெரும்பாலான வாழ்க்கையை மகாராட்டிரத்தில் நாசிக்கு நகரத்தில் கழித்தார்.
மராத்தி மொழி நாள்
இவருடைய பிறந்தநாளான பிப்ரவரி 27, மராட்டி மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
படைப்புகள்
கவிதைத்தொகுப்புகள்
- விசாக (Vishakha) (1942)
- இமரேச (Himaresha) (1964)
- சந்தோமயி Chhandomayi) (1982)
- சீவனலகரி (Jeewanalahari) (1933)
- செயிச்சா குஞ்சா (Jaicha Kunja) (1936)
- சமிதா (Samidha) (1947)
- கான (Kana) (1952)
- கினாரா (Kinara) (1952)
- மராத்தி மதி (Marathi Mati) (1960)
- வாதல்வெல் (Wadalwel) (1969)
- இரசயாத்திரா (Rasayatra) (1969)
- முக்தாயன் (Muktayan) (1984)
- சிரவண் (Shrawan) (1985)
- பிரவாசி பட்சி (Prawasi Pakshi) (1989)
- பத்தேய (Patheya) (1989)
- மேகதூது (Meghdoot) (காளிதாசரைன் மேகதூதின் மொழிபெயர்ப்பு) (1956)
- சுவாகத்து (Swagat) (1962)
- பாலபோத மேவியத்தில் குசுமாகரசு) (1989)
புதினத் தொகுப்புகள்
- பூக்காரி (Phulawāli)
- சோட்டே ஆணி மோட்டே (Chhote Āni Mothe)
- சத்தாரிச்சே போல் ஆணி இதேர் கதா (Satāriche Bol Āni Iter Kathā)
- காஃகி விருத்தா காஃகி தருண் (Kāhi Wruddha, Kāhi Tarun)
- பிரேம் ஆணி மாஞ்சார் (Prem Āni Mānjar)
- அப்பாயிண்மெண்ட்டு(Appointment)
- ஆஃகே ஆணி நாஃகி (Āhe Āni Nāhi)
- விராமச்சின்னே (Wirāmachinhe)
- பிரத்திசாது (Pratisād)
- ஏக்காக்கித் தாரா (Ekāki Tārā)
- வாதேவாரல்யா சாவல்யா (Wātewaralyā Sāwalyā)
- சேக்பியரேச்சியா சோதாத்து (Shakespearechyā Shodhāt)
- உரூப்பரேசா (Roopareshā)
- குசுமாகரசாஞ்சியா பாரா கதா (Kusumāgrajānchyā Bārā Kathā)
- சாதூச்சி ஃகோதி (Jādoochi Hodi) (குழந்தைகளுக்காக)
நாடகங்கள்
- யயாத்தி ஆணி தேவயானி (Yayāti Āni Dewayāni)
- வீசா மணாலி தரத்தீலா (Weeja Mhanāli Dharateelā)
- நாட்டசம்ராட்டு (Natasamrāt)
- தூர்ச்சே திவே (Doorche Diwe)
- தூசரா பேட்வா (Dusarā Peshwā)
- வைசெயந்தி (Waijayanti)
- கௌவுந்தேயா (Kounteya)
- இராசமுகுத்து (Rājmukut)
- ஆம்ச்சே நாவ் பாபுராவ் (Āmche Nāw Bāburāo)
- விதூசக்கு (Widushak)
- ஏக்கு ஃகோத்தி வாகின் (Ek Hoti Wāghin)
- ஆனந்து (Ānand)
- முக்கியமந்திரி (Mukhyamantri)
- சந்திர சீத்தே உகாவத்து நாஃகி *Chandra Jithe Ugawat Nāhi)
- மகாந்து (Mahant)
- கைகேயி (Kaikeyi)
- பெக்கெட் (Translation of The Honour of God by Jean Anouilh)
ஓரங்க நாடகம்
- தீவானி தவா (Diwāni Dāwā)
- தீவாச்சே கர் (Dewāche Ghar)
- ப்ராக்ஷி தாரே (Prakāshi Dāre)
- சங்கர்ஷ் (Sangharsh)
- பெட் (Bet)
- நாடக் பஸத் அஹே அனி இத்தர் ஏகான்கிகா (Natak Basat Āhe Āni Itar Ekānkikā)
புதினங்கள்
- வைஷ்னவா (Waishnawa)
- ஜானவி (Jānhawi)
- கல்பனேச்சிய தீராவர் (Kalpanechyā Teerāwar)
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ Modern Indian literature, an anthology, (Volume 2). Sahitya Akademi. 1992. p. 846. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7201-324-8.
- ↑ 2.0 2.1 "Kusumagraj is dead". Indian Express. 11 March 1999. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990311/ige11083.html.
- ↑ K. M. George, ed. (1997). Masterpieces of Indian literature, (Volume 1). National Book Trust. p. 927. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-237-1978-7.