கீழப்பாவூர் நரசிம்மர் கோயில்
கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8°55′46″N 77°23′45″E / 8.929335°N 77.395865°ECoordinates: 8°55′46″N 77°23′45″E / 8.929335°N 77.395865°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி மாவட்டம் |
அமைவிடம்: | கீழப்பாவூர் |
ஏற்றம்: | 188 m (617 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | நரசிம்மர் |
தாயார்: | அலர்மேல்மங்கை |
சிறப்புத் திருவிழாக்கள்: | நரசிம்ம ஜெயந்தி வைகுண்ட ஏகாதசி புரட்டாசி சனிக்கிழமைகள் |
கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ளது.[1] நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.[2]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 188 மீட்டர் உயரத்தில், 8°55′46″N 77°23′45″E / 8.929335°N 77.395865°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் அமையப் பெற்றுள்ளது. திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து மேற்கில் 44 கி.மீ. தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கி.மீ. தொலைவிலும் உள்ள பாவூர்சத்திரம் - சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ள கீழப்பாவூர் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "Lakshmi Narasimhar Temple : Lakshmi Narasimhar Lakshmi Narasimhar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.
- ↑ "கீழப்பாவூர் நரசிம்மர் கோவில், மாலைமலர்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-05-27.