கீதா சிங்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வட இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட கீதா சிங் இளம்வயதிலேயே தெலுங்கானாவின் நிசாமாபாத்தில் குடியேறியுள்ளார். திரைப்படத்துறை மீதான ஆர்வத்தினால் தெலுங்கு மொழியை திறம்பட கற்று மறைந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இ. வீ. வெ சத்யநாராயணனால் தயாரிக்கப்பட்ட எவாடி கோல வாடிடி (2005) என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமாயுள்ளார். முதல் படத்திலேயே தனது நகைச்சுவை நடிப்பினால் பரவலாக அறியப்பட்ட இவர், அதை தொடர்ந்து அல்லரி நரேஷ் நடித்த கிடகிதலு (2006) திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானார். இவ்விரு படங்களையும் சத்யநாராயணா இயக்கி தயாரித்துள்ளார். கீதா சிங் பதினெட்டு ஆண்டுகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கலைஞராக ஐம்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பிரம்மானந்தம், அலி, வேணு மாதவ், தர்மவரப்பு சுப்பிரமணியம் மற்றும் கொண்டவலச லட்சுமண ராவ் போன்ற பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இவருக்கான வெளியையும் உருவாக்கியுள்ளார். இவர் தனது அண்ணனின் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவர்களில் ஒரு மகன் சாலை விபத்தில் இறந்த பின்னர் திரை வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்.[1] [2][3]

திரைப்படவியல்

 

  • ஏவாடி கோலா வாடி (2005)
  • கிடாக்கிதாலு (2006)
  • பிரேமாபிஷேகம் (2008)
  • சசிரேகா பரிணயம் (2009)
  • ஊஹா சித்திரம் (2009)
  • மொண்டி மொகல்லு பென்கி பெல்லாலு (2009)
  • மொகுடு காவல் (2009)
  • இலக்கு (2009)
  • மல்லி மல்லி (2009)
  • ராம்பாபு காடி பெல்லம் (2010)
  • ஆகாச ராமண்ணா (2010)
  • ராம்தேவ் (2010)
  • விஷம் (2011)
  • பப்லு (2011)
  • நாக்கு ஓ லவ்ரூந்தி (2011)
  • பில்லா டோரிகிதே பெல்லி (2011)
  • அமயக்குடு (2011)
  • தெலுகம்மயி (2011)
  • சீமா தபகை (2011)
  • சிவப்பு (2012)
  • தூல் (2012)
  • லக்கி (2012)
  • நீலவேணி (2013)
  • ஒன்பதுலே குரு (2013; தமிழ்)
  • ராயலசீமா எக்ஸ்பிரஸ் (2013)
  • கெவ்வு கெக்கா (2013)
  • பொட்டுக்காடு (2013)
  • சங்கராபரணம் (2015)
  • சரினோடு (2016)
  • கல்யாண வைபோகம் (2016)
  • ஈடோ ரகம் ஆதோ ரகம் (2016)
  • தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ. பிஎல் (2019)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கீதா_சிங்&oldid=22573" இருந்து மீள்விக்கப்பட்டது