கீதா இராஜசேகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கீதா இராஜசேகர்

கீதா இராஜசேகர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையைச் சேர்ந்த ஒரு பிரபலமான கர்நாடக இசை பாடகி ஆவார் [1] இவர் இந்திய அரசு நிறுவனங்களான அகில இந்திய வானொலி (ஏ.ஐ.ஆர்) மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி போன்றவற்றின் முதல் தரநிலை இசைக் கலைஞர் ஆவார். புது தில்லியின் இந்திய கலாச்சார உறவுகள் மன்றத்தின் (ஐ.சி.சி.ஆர்) தேர்ந்தெடுக்கப்பட்ட தரநிலைக் கலைஞர்கள் குழுவில் இவர் இடம் பெற்று உள்ளார்.

தொழில்

கீதா இராஜசேகர் புது தில்லியில் சிறு வயதிலேயே கர்நாடக இசையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார், மேலும் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும் சங்கீத கலாநிதி பட்டம் வெண்றவருமான திருமதி, தா.கி. பட்டம்மாள் அவா்களிடம் தனது பயிற்சியை தொடர்ந்து பயின்றார்.

அவர் மதிப்புமிக்க அமைப்புகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா, கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது பாடல்களைப் பாடியுள்ளார்.

புகழ்பெற்ற இசை பதிவு வெளியீட்டு நிறுவனங்கள் கீதா இராஜசேகர் பாடிய பல ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளன. கருநாடக இசையின் வளா்ச்சிக்கும் ஊக்குவித்தலுக்கும் தொடங்கப்பட்ட ராகாலயா என்ற அறக்கட்டளையின் "நிறுவன அறங்காவலராக" செயல்பட்டு வருகிறார்.

ஒரு ஆசிரியராக

கீதா ராஜசேகர் தற்போது கர்நாடக இசை குறித்த தனது விரிவான அறிவை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டும் செல்லும் விதமாக சென்னையில் உள்ள “மதுர கீதம்” என்ற தனது பள்ளி டொராண்டோ கனடாவில் உள்ள அதன் ஒரு கிளையின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறார், அங்கு (கனடாவில்) ஒவ்வொரு ஆண்டும் கோடை காலப் பயிற்சிப் பட்டறைகளில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்கிறார்.

கீதா இராஜசேகர் அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகத்தில் கௌலவப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

கீதா இராஜசேகருக்க "இசை மாமானி", "நாத பூசனி", "பால ரத்னா" என்ற பட்டங்களும், மிக சமீபத்தில் "இசைச் செல்வம்" என்ற பட்டமும் மாண்புமிகு முதலமைச்சரால் தமிழக வழங்கப்பட்டன. [2]

சென்னை மியூசிக் அகாதெமி உட்பட சென்னை நகரத்தின் கிட்டத்தட்ட அனைத்து மதிப்புமிக்க இசை சபைகளிலும் கச்சேரிகளை நடத்தியுள்ள அவா், மியூசிக் அகாடமி, ஸ்ரீ கிருஷ்ண கானசபா, இந்தியன் நுண் கலை சங்கம், ஆகியவற்றின் வருடாந்திர இசை விழாக்களின் போது அவருக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன

தனிப்பட்ட வாழ்க்கை

கீதா இராஜசேகர் முன்னாள் மத்திய அமைச்சரும் விடுதலைப் போராட்ட வீரருமான சி.சுப்பிரமணியத்தின் மகன் எஸ்.எஸ்.இராஜசேகரை திருமணம் செய்து கொண்டார், தற்போது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வசித்து வருகிறார்.

இசை வெளியீடுகள்

இவா் 2015 ஆம் ஆண்டில் ஆனந்த கீதம் என்ற இசைத் தொகுப்பையும்,[3] திருமுருகன் பாமாலை[4] என்ற பக்திப்பாடல் தொகுப்புகளையும் மற்றும் ஏராளமான இசைப் பாடல் தொகுப்புகளைப் பாடியுள்ளார். ஆனந்த கீதம் என்ற இசைத்தொகுப்பு பல்வேறு ராகங்களில் பாடப்பட்ட கருநாடக இசை பாடல் தொகுப்பாக வெளிவந்தது. மேலும் பாரம்பரிய இசைப் பாடல்களையும் பாடியுள்ளார்.[5] இவை அனைத்தும் குறுந்தகடுகளாக பல்வேறு இசை வெளியீட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்டன.

மேற்கோள்கள்

  1. "Lending a classy effect". தி இந்து. 25 December 2009 இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022031431/http://www.thehindu.com/arts/music/article69542.ece. பார்த்த நாள்: 19 December 2010. 
  2. https://www.sruti.com/index.php?route=archives/artist_details&artId=252
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  4. https://www.allmusic.com/album/thirumurugan-paamaalai-mw0002382783
  5. https://www.amazon.com/Geetha-Rajashekar-Classical-Vocal/dp/B00LDZOXH2
"https://tamilar.wiki/index.php?title=கீதா_இராஜசேகர்&oldid=27581" இருந்து மீள்விக்கப்பட்டது