கி. லோகநாதன்
Jump to navigation
Jump to search
முனைவர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கி. லோகநாதன் K. Loganathan |
---|---|
பிறப்புபெயர் | கிருஷ்ணன் லோகநாதன் |
பிறந்ததிகதி | ஆகத்து 11, 1940 |
பிறந்தஇடம் | கெடா, மலேசியா |
இறப்பு | ஏப்ரல் 17, 2015 | (அகவை 74)
பணி | உளவியத் துறைப் பேராசிரியர் |
தேசியம் | மலேசியர் |
பணியகம் | மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தமிழறிஞர், சுமேருத் தமிழ் ஆய்வாளர் |
துணைவர் | டாக்டர் சாரா |
பிள்ளைகள் | டாக்டர் நவீனா, டாக்டர் அருணன் |
இணையதளம் | https://sites.google.com/site/ulaganaar/ |
முனைவர் கி. லோகநாதன் (11 ஆகத்து 1940 - 17 ஏப்ரல் 2015) மலேசியத் தமிழறிஞர். மலேசிய கல்வி அமைச்சிலும், பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழ் ஆய்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். சுமேரியத் தமிழ் ஆய்வுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர்.[1] இவர் நியூசிலாந்தில் கணிதத் துறையில் பட்டம் பெற்று பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்றார். சைவ சித்தாந்தத்தில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பல்வேறு சைவ சித்தாந்த வகுப்புக்களை நடத்தி வந்தார்.[1][2]
மறைவு
முனைவர் லோகநாதன் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ்டவுனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 2015 ஏப்ரல் 17 அன்று தனது 74வது அகவையில் காலமானார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "சைவ சித்தாந்த உரைகள்". தமிழ் மரபு அறக்கட்டளை. 01 டிசம்பர் 2008. Archived from the original on 2015-10-09. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ திவாகர் (6 மே 2013). "இந்த வார வல்லமையாளர்!". வல்லமை (மின்னிதழ்). பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2015.