கி. அரங்கன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கி.அரங்கன்

கி. அரங்கன் (K.Rangan, 3 செப்டம்பர் 1942) தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் ஆவார்.

பிறப்பு

தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னச்சேலம் என்னும் ஊரில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர் கிருஷ்ணசாமி ராஜம்மாள் ஆவர்.

கல்வி

  • பி.ஓ.எல் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், தமிழ்நாடு, 1963)
  • முதுகலை (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், தமிழ்நாடு, 1965)
  • முனைவர் (தில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி, 1973)

பணி

மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (En: Central Institutue of Indian Languages) 1970 முதல் 1982 வரையிலும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் 1982 முதல் 2003 வரையிலும் பணியாற்றியுள்ளார்.

நூல்கள்

மொழியியல், இலக்கியம், சமூகவியல், இலக்கணம் உள்ளிட்ட துறைகளில் 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். கீழ்க்கண்ட நூல்கள் உள்பட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

  • தொடரியல் மாற்றிலக்கண அணுகுமுறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985 [1]
  • நோம் சோம்ஸ்கி பன்முக அறிமுகம், மொழியியல் துறை, கோயம்புத்தூர் [2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கி._அரங்கன்&oldid=26037" இருந்து மீள்விக்கப்பட்டது