காவ்யா செட்டி
Jump to navigation
Jump to search
காவ்யா செட்டி | |
---|---|
இஷ்தாகம்யா படப்பிடிப்பில் காவ்யா | |
பிறப்பு | மங்களூர், கர்நாடகம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | காவ்யா எம். செட்டி |
பணி | திரைப்பட நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2011–தற்போது வரை |
உயரம் | 5 அடி 8 அங் (1.73 m)[1] |
எடை | 55 கி.கி[1] |
காவ்யா செட்டி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். 2011ஆம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். நம் துனியா நம் ஸ்டைல் என்னும் கன்னடத் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்னர் வணிக ரீதியான விளம்பரங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொடக்ககால வாழ்க்கை
காவ்யா, கர்நாடகத்தின் மங்களூரில் பிறந்தவர்.[2] இவர் துளுவர் இனத்தைச் சேர்ந்தவர்.[3] இவரது தந்தை மனோகர் செட்டி ஒரு பொருளாதார ஆசிரியர், தாய் வசந்தி ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவர். மங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், என்.எம்.ஏ.எம். தொழில்நுட்பக் கல்லூரியில் 2010ஆம் ஆண்டில் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.
திரை வாழ்க்கை / நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2013 | நம் துனியா நம் ஸ்டைல் | ராதா | கன்னடம் | |
2013 | ஐ லவ் யூ கீர்த்தி | கீர்த்தி | கன்னடம் | |
2014 | நத்தூது | தெலுங்கு | ||
2014 | அவம் | தமிழ் | ||
2014 | சிவானி | தமிழ் /தெலுங்கு | தாமதமாகியது | |
2014 | விஜயாதித்யா | கன்னடம் | படப்பிடிப்பில் | |
2015 | இது என்ன மாயம் | பல்லவி | தமிழ் | |
2015 | சூம் | கன்னடம் | படப்பிடிப்பில் | |
2016 | இஷ்தாகம்யா | கன்னடம் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 http://beautypageants.indiatimes.com/photoshow/7139498.cms?curpg=4
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Kavya-Shetty-to-debut-in-Tollywood/articleshow/33244076.cms
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Kavya-Shetty-sets-her-eyes-on-Tollywood/articleshow/17557441.cms
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.