காவிரி நதிக்கரை சாலை, ஈரோடு
காவிரி நதிக்கரை சாலை | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 14 km (8.7 mi) |
பயன்பாட்டு காலம்: | ஆகஸ்டு 2019 – |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | பவானி கோணவாய்க்கால் |
முடிவு: | லக்காபுரம் பரிசல்துறை |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | ஈரோடு |
நெடுஞ்சாலை அமைப்பு | |
காவிரி நதிக்கரை சாலை (Cauvery Riverfront Road Corridor), தமிழ்நாட்டின் ஈரோடு மாநகரத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைக்கப்படும் சாலைத் திட்டமாகும். இது ஈரோடு மாநகரத்தை ஒட்டி வடக்கு-தெற்காக 14 கி.மீ. நீளத்திற்குச் செல்லும் வகையில் அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டம்
ஈரோடு மாநகரின் வடக்கு எல்லையில் உள்ள பவானியை அடுத்த கோணவாய்க்கால் பகுதியில் சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து துவங்கும் இந்த சாலை காவிரி ஆற்றுக்கும் காளிங்கராயன் கால்வாய்க்கும் இடையிலேயே பயணித்து ஈரோடு மாநகரின் தெற்கு எல்லையில் உள்ள லக்காபுரம் பரிசல் துறை அருகே சென்று கரூர் பிரதான சாலையுடன் இணைகிறது.[1]
முக்கிய சாலை சந்திப்புகள்
- சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை 544 - கோணவாய்க்கால்
- தொப்பூர் - மேட்டூர் - ஈரோடு தேசிய நெடுஞ்சாலை 544H
- திண்டல் - பெரியசேமூர் - அக்ரஹாரம் கதவணை உள்வட்ட இணைப்புச்சாலை
- வைராபாளையம் நீரேற்று நிலைய சாலை
- சங்ககிரி சாலை - கருங்கல்பாளையம் காவேரி சோதனைச்சாவடி
- சோலார் - வெண்டிபாளையம் கதவணை உள்வட்ட இணைப்புச்சாலை
- பரிசல்துறை-கொக்கராயன்பேட்டை வெளி வட்டச் சாலை
சாலையையொட்டி காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிக்கும்படி பல இடங்களில் மின்விளக்குகளுடன் கூடிய பூங்காக்கள், உணவகங்கள், வாகன ஓட்டிகளுக்கான ஓய்விடங்கள் ஆகிய வசதிகளுடன் அமையுமாறு உத்தேசமாக ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் இந்த சாலை திட்டமிடப்பட்டுள்ளது.[2]
ஈரோடு கிழக்கு புறவழிச்சாலை
கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஈரோடு சத்தி சாலை, சேலம் சாலை மற்றும் கரூர் சாலையை இணைக்கும் விதமாக மாநகரின் கிழக்கு பகுதியில் 11.54 கி.மீ நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 24 இலட்சம் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு புறவழிச்சாலையின் சுமார் 10 கி.மீ பகுதியானது முன்மொழியப்பட்ட காவிரி நதிக்கரை சாலையின் வழித்தடத்தில் அமையும்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/oct/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-14-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3263959.html
- ↑ https://www.dinamalar.com/district_detail.asp?id=2367387